Wednesday, October 9, 2019

My creation: கல்கி வெண்பா

My creation: கல்கி வெண்பா: அன்பு சூத்திரன் நீ கல்கி வெண்பா நீ  மச்ச தாசனே இன்ப சொரூபனே  கூர்மா தேசனே செந்தாமரை தேகனே  கல்கி கருட புராணானே சிம்ம தாசா வாமன வண்...

கல்கி வெண்பா




அன்பு சூத்திரன் நீ கல்கி வெண்பா நீ
 மச்ச தாசனே இன்ப சொரூபனே
 கூர்மா தேசனே செந்தாமரை தேகனே
 கல்கி கருட புராணானே சிம்ம தாசா
வாமன வண்ண மாயக்கண்ணா
உன் மெல்லிசை கானத்திலலே
என்னை நீ ஈர்த்தாய்
மென்மையில் புத்தனே கல்கி யுத்தனே
மன்மத அன்பு ஜித்தனே சந்திர வர்மனே
 நெற்றி கண் கிருஷ்ணனே
 பரவச ராஜ வேந்தனே பரசுராமனே
ஆக்ரோஷ கல்கியே உன் கபட வேஷமா இது
துஷ்ட சம்ஹாரனே இங்கு உள்ளிருக்கும்
வல்வினைகளை வதம் செய்ய வந்தாயா
இல்லையேல் என்னிடம் வாதம் செய்ய வந்தாயா 

காதல் கிருஷ்ணா




 கிருஷ்ணா வெண்ணெயை  திருடினாய் 
இந்த பெண்ணையும் திருடினாய் 

எந்தன் மதுசூதனனே பத்மநாபனே 
பூலோகத்து ரம்பை நானே 
தெய்வலோகத்து ரதியும் நானே 

ஏய் கிருஷ்ணா என்னை திருடாமல் திருடினாய் 
மெல்ல வருடாமல் வருடினாய் 

காதல் கிருஷ்ணா உன்னை காண்பது 
என் இரு கண்ணா 

Thursday, August 9, 2012

இந்த கோகுலாஷ்டமியில் !!!

கோகுலத்தின் கண்ணா எந்தன் அழகு மணிவண்ணா !!

 உனக்காக வாசலிலே கோலமிட்டேன்
 மணம் கமலும் பூக்கள் தூவி காத்திருந்தேன்

 என் வாசல் தேடி நீ வருவாயா 
உன் வருகையை பரிசாய் எனக்கு தருவாயா

வாசலில் உன் பிஞ்சு பாத சுவடுகளிட்டு
 பல வித பலகாரங்கள் படைத்து!!

 உனது வருகையை எண்ணி பூத்திருக்கேன் நான் !!

 நீ வந்தால் நான் தருவேன் பால் மணம் மாறாத வெண்ணையும்,
 ரவா லட்டும், வெண்ணை உப்பு சீடையும்

 தித்திப்பான இனிப்பு சீடையும் அவல் பாயாசமும்

 வாடா என் நீலவண்ண அழகிய கண்ணா

Sunday, September 4, 2011

விழித்திரையில்-கரைகிறது

வெள்ளை குளத்தில் கருப்பு வட்ட படகு
வானிலை மாற்றத்தில் சிவந்தது குளம்
கசிகிறது உப்பு நீர் கரைச்சல் அருவியாய்

வீங்குது குளத்தின் கரை அனல் பறக்க
வற்றாது நிறைகிறது கண்ணீர் குளம்
ஊரே வெள்ளக்காடாய் மாறி

தீரா துக்கத்தை புதைக்குது நெஞ்சில்
துரு பிடித்த ஆணியாய்
இவை அனைத்தும் அவள் விழித்திரையில்
நனைந்து கரைகிறது

Tuesday, July 26, 2011

வந்தால் பூஞ்சிட்டு

உந்தன் அசலாய் வந்தால் பூஞ்சிட்டு

தீர்த்தி என்னும் மதிப்புமிகு தங்க தட்டு

மென்மையான எழிலரசி அனைவர்

மனம் கவரும் இளவரசி

தீர்த்தி தொட்ட அனைத்தும் சுப நேர்த்தி

வானத்து பௌர்ணமி மண்ணில் வந்தது

இது இன்பத்தை பரிசளிக்கும் சுனாமி

இதற்கு யாருமில்லை பினாமி

அவளின் தாயே ஒரு அழகிய முத்து

அதனால் கிடைத்தது இந்த சொத்து

நினைவு ராகத்தில் தனிமையாய்

நில்லாது துடிக்கும் என் இதயம் அணு நொடியும்
உந்தன் பெயரை உச்சரிக்க

நான் திரும்பிய திசையெங்கும் உன்
பிம்ப அலைகள் தெரிய

உந்தன் வார்த்தைகளே அமுத கானமாய்
என்றும் எனக்கு ஒலிக்க

உன் ஸ்பரிச ரேகை என்னில் படர வேண்டி
நான் ஆழ்ந்து தவமிருக்க

மீட்டாத வீணையும் இன்று இசைக்கிறது
உந்தன் பெயரை நான் சொல்லுகையில்

நீ என்னை வந்து சேரும் காலம் வரை
இப்படியே என் பொழுது இனிமையாய்

உன் நினைவு ராகத்தில் தனிமையாய்
இசைத்து என்னை சந்தோஷ சாந்தியை
பரிசாய் தருகிறது

இந்த பிரிவு கொடியதாய் நீண்டாலும்
மாண்டு போகாது என் மூச்சு முத்து

பொக்கிஷமாய் காத்திருப்பேன்
ஒரு அழகிய சிப்பி முத்தாய்

உனது வருகை என்னை நோக்கி வரும்
என்று துவளாமல் நினைவு ராகம் பாடல் பாடி

நம்பிக்கையாய் இன்ப ராகம்
படித்து மனமகிழ்ந்து வரவேற்பேன்

காதல் செய்யும் நொடிகள்

காதல் செய்யும் நொடிகள்
மனசு தேனாய் பேசும்

அதுக்குள் இருக்கும் கனவுலகம்
உயிர் பெற்று சுழலும் .

தூக்கம் சேட்டு கடையில் அடமானமாகும்
ஜொள்ளும் கடலையும் வட்டி போடும்


காதலின் சாறு தித்திப்பான கல்கண்டு
சலிக்காத காதல் பித்து நிறையும் எங்கும்

fm அலைவரிசை போல இனிமையாய்
பேசி கொண்டே இருக்கும்

நேரம் சென்றாலும் இரவும் பகலும்
உணரமால் தொடரும் பேச்சு

நீ எப்போது பேசுவாய் என்று ஏங்கி தவிக்கும்
அடங்கா மனது உன் பேச்சுக்கு


அவருக்காக மனம் உருகும்
காதலை நீ உணர்ந்தால்

நீ அதை உணரும் பொழுது
தூக்கம் கானல் நீராய் மறையும்

புது வித மாற்றங்கள் உன்னில் குவியும்
அதையும் நீ உணருகையில்

உனது வாழ்க்கை ஒருவரில் இருந்து
இருவராய் மாறுகையில்
அது அமிர்தமாய் இனிக்கும்

வாழ்கையின் முழுமையை உணர வைக்கும்

உணவின் புனிதம்

நீ சிந்தி சிதறிய உணவு
என் ஒரு நாள் குடும்ப பசியை ஆத்தும்
இப்படிக்கு எறும்பு

நீ வேண்டாம் என்று ஒதுக்கிய உணவு
ஒரு குழந்தையின் பசியை ஆத்தும்

உன் வாழ்கையில் ஒரு முறையாவது
அன்ன தானம் செய் ஆதரவு இல்லாதவருக்கு

உண்ணும் உணவை பகிர்ந்து உண்ணும் பொழுது
மனதும் வயிறும் நிறையும்

உணவை வீண் ஆக்காதே
ஏதோ ஒரு உயிர்
உண்ணட்டும் உன்னோடு

Monday, April 25, 2011

சுவைமிக்க முந்திரி பாதாம் பால் அல்வா

ஒரு தடிமான வாணலி எடுத்தேன்
அதில் சிரிது கமகமக்கும் நெய் தடவினேன்

அடுப்பில் நெருப்பு மூட்டி அனலாக்கினேன்
ஒரு லிட்டர் பசும்பால் எடுத்தேன்

அதில் மெல்ல மெல்ல ஊற்றினேன்
சிந்தாமல் சிதறாமல் அழகாய்

வானலியில் தடவிய நெய்யும் எழிலாய்
மிதக்கிறது பசும்பாலில் கலந்து சிறிதளவாய்

மிதமான தீயில் பாலை கிண்டி கொண்டே இருந்தேன்
அது திடீரென்று கொஞ்சம் கொஞ்சமாக

திரளுகிறது ஆட்பரிக்கும் பாலாடைகளாய்
அதில் ஒரு கப் சர்க்கரை அதில் சேர்த்தேன்

கிண்டி கொண்டே இருக்கையில் வந்தது
ஒரு விதமான வாசம் கலந்தது என் சுவாசமாய்

அந்த அழகில் மயங்கித்தான் போனேனோ
பசும்பாலின் மணம் மங்குகிறது மெல்ல மெல்ல

ஆனால் மென்மையான பால்கோவாவின் மணம்
அதில் வந்தது அதிசயமாய் எனக்கு தேவையோ

பால் அல்வா பால்கோவா இல்லை என்று தெளிந்தேன்
அதனால் பொறுமையாய் காத்துகிடந்தேன்

ஒருபுறம் ஒரு குட்டி வாணலி எடுத்து
அதில் மூன்று கரண்டி நெய் ஊற்றி

பொடித்த முந்திரி போட்டேன் பொன்னிறமாய்
அதில் குதித்தான் முந்திரியின் தோழன்


தங்க நாயகன் காய்ந்த திராட்சை கை கொடுக்க
ஆனால் ஏதோ ஒன்று இப்பொது கோபமாய்

முண்டிக்கொண்டு வந்தது சண்டையிட அது
வேறு யாரும் இல்லை பாதாம்பருப்பு நண்பன் தான்

அவனை பாதி பாதியாய் பொடித்தோ
அல்லது துருவியோ சேர்க்கவேண்டும் என்று கேட்டது

கண்டிப்பாக என்னிடம் ஒரு வில்லத்தனமாய்
அவனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்தேன்

இந்த நேரத்தில் பசும பால் மணக்கும் அல்வா பதத்தில்
வர இருந்தது கண்டு தாளித்த நெய்யும்

தங்க திராட்சையும் மணக்கும் முந்திரியும்
பால் அல்வாவில் அழகாய் நீராடினார்கள்

உடனே ஒரு குரல் என்னை நோக்கி வந்தது
இப்பையும் எனைய கண்டுக்கமாற்றியே என்று

அது நம்ம ஜமிந்தார் பாதாம்பருப்பு தான்
அவரயும் பால் அல்வா குளத்தில் நீராட செய்தேன்

அல்வா பதம் வந்தது வறுபட்ட முந்திரியும்
தங்க திராட்சையும் ஜமிந்தார் பாதாம்பருப்புடன்

சங்கமம் ஆனது இந்த அழகிய கூட்டணி
நெய் சொட்ட சொட்ட கிடைத்தது அல்வா
பாதாம் முந்திரி போட்ட பால் அல்வா

நாக்கில் ஊருது எச்சில் இதை உண்ண
இதோ தருகிறேன் நண்பர்களே உண்டு மகிழுங்கள்

எப்படி உள்ளது தித்திப்பான நெய் மணம் மாறாத
முந்திரி பாதம் திராட்சை அல்வா

பின் குறிப்பு இதில் ஜாதிக்காயும் ஏலக்காயும்
கூட சேர்த்துக்கொள்ளலாம் மணம் ஆளையே மயக்கும்

வேணுமா வேணுமா தித்திக்கும் தங்க லட்டு

வேணுமா வேணுமா தித்திக்கும் தங்க லட்டு
இதோ செய்து தருகிறேன் வா என் பூஞ்சிட்டு

வருதெடுத்த சிறு சிறு பூந்தி உருண்டைகளை
சிறிது நேரம் ஆறவிட்டேன் மெதுவாய்

சீனிபாகை லாவகமாய் காச்சி எடுத்தேன் அதில்
கலர் பொடியை ஒரு சிட்டிகை அளவு கலந்தேன்

தங்கம் போன்ற மஞ்சள் நிறமானது சீனிப்பாகு
அதில் மணம்வீசும் சிறிது பொடித்த ஏலக்காய்,
ஆளையே தூக்கும் ஜாதிக்காய் சேர்த்து

பொரித்தெடுத்த பூந்தி உருண்டையும் கோர்த்து
கலந்து ஊறவிட்டேன் ஒரு சில நிமிடங்கள்

அதே நேரத்தில் வானலியில் நெய் விட்டு
அது சூடாகியதும் உடைத்த முந்தரியிட்டேன்

அது பொன் நிறமானது கண்டு காய்ந்த திராச்சையும்
நானும் வருகிறேன் முந்திரிக்கு துணையாய்
என்று கூறி நெய்யில் குத்திதது அழகாய்

உடல் உப்பியது தங்க நிற திராட்ச்சை
வீடே மணக்கிறது நெய்யில் வறுபட்ட
தோழர்கள் முந்திரி திராட்சையால்

அதையும் ஊரிகொண்டிருந்த பூந்தி
கலவையில்சேர்த்தேன் மெல்ல மெல்ல
நன்றாய் கலந்து சிறிதளவை தனியே
எடுத்து வைத்தேன்இனிப்பு பூந்திகாக

மீதியை சற்று மிதமான சூட்டில்
சிறு சிறு உருண்டைகளாக பிடித்தேன்

வந்தது தங்க உருண்டை நெய்யின் மணத்தில்
ஏலக்காய் ஜாதிக்காய் என்னும் ரதத்தில்

முந்திரி,திராட்சை பூந்தியின் அணிவகுப்பில்
தித்திக்கும் லட்டாய் நெய்மணம் சொட்ட சொட்ட

குட்டி பொன்னே இதோ வாங்கிக்கொள் உன் பொக்கிஷத்தை
குட்டி பையா இதோ பெற்றுக்கொள் உன் அமிர்தத்தை

நாக்கில் எச்சில் சொட்ட வாங்கி உண்டது
அந்த பிஞ்சு கூட்டங்கள் நன்றி சொல்லிகொண்டே

திருமணம் பந்தம்

என்னவரின் கடைக்கண் பார்வையில்
விழுந்தவள் தான் இந்த பேதை பெண்

என் பாதை இன்று வரை அழகாய்
அவரின் காலடி தடத்தை தொடர்கிறது

திருமணம் என்னும் புனிதமான பந்தத்தில்

மொரு மொரு தித்திக்கும் மைதா இனிப்பு துக்கடா

மொரு மொரு மைதா இனிப்பு துக்கடா

மாலை நேர வேளை பசிக்குது எனக்கு
அதுவும் மொரு மொரு பலகாரம் வேண்டும்

கொஞ்சம் இனிப்பாய் தின்னு பார்க்கல்மே என்கிறது
என் மனசு சொல்லுது அதிரடியாய்

நொடியில் தயாரிக்கும் தித்திக்கும் மொறு மொறு
இனிப்பு துக்கடா இருக்கு என்ன கவலை இனி

கிடைத்தது ஒரு யோசனை ருசித்து சாப்பிட
மொரு மொரு இனிப்பு துக்கடா சாப்பிடலாம் டக்கரா

இனிப்பும் இருக்கும் தித்திப்பாய் இந்த துக்கடாவில்
இரண்டு கப்பு மைதா மாவு எடுத்தேன் வேகமாய்
ஒன்றரை கப்பு பொடித்த சர்க்கரை சேர்த்தேன்

அரை டீ- ஸ்பூன் பொடித்த ஏலக்காய்
தூவினேன் அதில் மெல்ல மெல்ல

இரண்டு டீ- ஸ்பூன் வெண்ணையும் சேர்த்தேன்

இல்லையேல் நெய் சேர்த்து கொள்ளலாமே
அதற்கு பதிலாய் தெளிவாய் நாம்

இப்பொது தண்ணீர் சேர்த்தேன் கொஞ்சமாய்
சப்பாத்தி மாவு பதத்தில் நான் பிசைய பிசைய
என் நாக்கு ஊறியது ருசியை சுவைக்க ஆவலாய்

இப்பொது சப்பாத்தி உருண்டை
தயார் செய்தேன் மைதா கலவையில்

ஒருவித கைவித்தை நான்
செய்கையில் மனம் பறக்குது

சீக்கரம் செய்யடி பெண்ணே
என்று தான் துடிக்குது மெதுவாய்

ஒவ்வொரு உருண்டையும்
உருட்டி நான் தேய்க்க தேய்க்க

சப்பாத்தியில் கத்தி வைத்து
எனக்கு புடித்த வடிவில் கோடிட்டேன்

சதுர வடிவில் நான் அதிரடியாய் வெட்டி
வெய்த்துவிட்டேன் அழகாய் இருந்தது அது

இப்பொது அடுப்பில் நெருப்பு மூட்டி
இரண்டு கரண்டி எண்ணெய் எடுத்து

பொரிக்கும் அளவு ஊற்றி மிதமான
தீயில் வெய்தேன் பக்குவமாய்

எண்ணையும் காய்ந்தது வேகமாய்
குதிக்க தயாரானார்கள் மைதா படை வீரர்கள்

நான் நீ என்று போட்டி போட்டுக்கொண்டுதான்
எண்ணெய் குளத்தில் குதித்தார்கள் உப்புவதர்க்கு

உப்பி நிறம் மாறினார்கள் மெல்ல மெல்ல
அந்த அழகை நான் என்னவென்று சொல்ல

சிறிது திருப்பி போட்டேன் நான் அழகாய்
முழுதாய் வெந்ததும் மொரு மொருப்பு வந்ததும்

எடுத்தேன் மொரு மொரு கமகமக்கும் துக்கடா
துடுக்குத்தனமாய் தயார் ஆனது

சுட சுட கிடைத்தது தித்திப்பான்
மொரு மொரு இனிப்பு துக்காடவும்

இதை எத்தனை நாளும் சேமித்து
வைத்து சாப்பிடலாம் கெட்டு போவதற்கு

வாய்ப்பில்லை என்று கூறலாம்
15 நாள் வரை வெய்த்து கொள்ளலாமே

தலைபொங்கல் சீர்- பொங்குது சந்தோஷம்

தலை தூக்குது தூளாய் என் வீட்டில் தலை பொங்கல்
இன்பம் சேர்ந்தது மேலாய் அதன் அழகிய பங்கில்


வந்தனர் என் பெற்றோர் பொங்கல் சீர்கொண்டு
வீர நடையாய் சூர நடையாய் மாமியார் வீட்டுக்கு
கையில் பலவித பொருள்கள் சுமந்து கொண்டு
அதை வாங்கி தரையில் வெய்தேன்
பெரிய தாம்புல தட்டு எடுத்து
அதில் அடிக்கினர் அடுக்கடுக்காய்
பலவித பழங்களும் காய்கறிகளும்
இனிப்பு கிழங்கும் தலை தூக்கி பார்த்தது
பாசிபருப்பும் கடலை பருப்பும் ஆடியது
ஒரு வித நாட்டியம் என்னை நோக்கி

அடுத்து கொடுத்தார்கள் கனத்த பெரிய பானை
அது தான் முக்கியமான தலை பொங்கல் பானை
பொங்கல் கரண்டியின் கணம் தாங்காமல் அத்தை
நகைச்சுவையும் அளித்தார் இந்த கரண்டியை
மூன்று பேர் தூக்கவேண்டும் போலும் என்று கூறினார்
அனைவரும் அதை கேட்டு சிரித்தனர்
மற்றவர்குளும் கரண்டியை தூக்குவதை
ஒரு சாதனையாய் செய்ய முயன்றனர்

பொங்கல் சீருகான சாமான்களும்
அடுக்கினார் என் அம்மா சீரான வரிசையில்
வெண் பொங்கலுக்கும சக்கரை பொங்கலுக்கும்
சீரகம் மிளகு முந்திரியும் கிஸ்மிஸ் பழமும்
ஏலக்காய் தூளும் கமகமக்கும் நெய்யும்
மயக்கும் வெள்ளை பச்சரிசியும்
தித்திக்கும் மண்டை வெல்லமும்
கதம்பமான பூவும் மணக்கும் மல்லிகையும்
மங்கலமான சந்தனம் திடமான கரும்பும்

காய் கறிகளின் அணிவகுப்பை சொன்னால்
மலைப்பாய் போகும் உங்களுக்கு
அவரைக்காய் பீன்ஸ் காரட் பூசணி
முட்டைக்கோஸ் காளிப்லோவேர்
பச்சை பட்டாணி பச்சை மொச்சையும்
பட்டர் பீன்சும் சோயா பீன்சும்
இஞ்சி பச்சை மிளகாய் புதினா
கொத்த மல்லி வாழைக்காய்
உருளை கிழங்கு சேனை கிழங்கும்
சேப்ப கிழங்கும் வெங்காயம் தக்காளி
என்று இன்னும் எண்ணில் அடங்கா
காய்கறிகள் மற்றும் பலவித பலகாரங்கள்
மாமனார் மாமியார் சொனார்கள்
அம்மா !!! இப்பயே கண்ண கட்டுதே
சாமி என்று பிரிட்ஜில் இடமும் போதவில்லை
இவை அனைத்தையும் அடுக்க

என்னையும் என்னவரையும் வாழ்த்தினர் என்
பெற்றோர் பொங்கல் சீர் கொடுத்த கையுடன்
பூரித்தது பொங்கல் சீர் பூரித்தோம் நாங்கள்
இன்பத்தில் தலை பொங்கல் கொண்டாட தயார் ஆனோம்

தலை பொங்கல் மற்றும் பொங்கல்
வாழ்த்துக்கள் அனைவருக்கும் மனதுருக சொல்கிறேன்

காதல் அணுக்கள் -இது தானோ

உன்னை நான் காணுகையில்!!

என் அணுக்கள் எல்லாம் சிதறுகிறது!!

செய்கிறது புதிய தோற்ற அமைப்பு!!

எனக்குள் நடக்குது அதிரடியாய்!!

திடீரென்று ஒரு வேதியல் மாற்றம்!!

காதல் அணுக்கள் என்பது!!

இது தானோ உணர்கிறேன் நான் !!

சில நியதிகள் வாழ்க்கை பற்றி

உயிர் பிரியும் வலியும் உயிர் பிறக்கும்

வலியும் கொடுமையான ஒன்று !!!


உயிர் பிறக்கும் போதும் மற்றும் இறக்கும் போதும்

கண்ணீர் துளிகள் ஊற்றெடுக்கும் !!!


பிறப்பில் ஆனந்த கண்ணீரும் இறப்பில்

துயர கண்ணீரும் அருவியாய் ஊற்றும் !!!!


வாழ்கையின் தொடக்கம் மற்றும் வாழ்கையின் முடிவும்

சொல்லும் தத்துவம் இன்பதுன்ப நீயதி !!!


இந்த பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்

எத்தனை முறைபிறக்கிறோம் எத்தனை முறை

இறக்கிறோம் நம் வாழ்கையில் !!!


இவை அனைத்தும் நாம் கடந்து வரும் அனுபவம் !!!


மண்ணில் தொடங்கிய ஆரம்பம் மண்ணிலே

முடியும் இது இறைவனின் விதி !!!


அதில் நானும் நீங்களும் அடக்கம் யாரும்

தப்ப முடியாத இன்பதுன்ப வலை !!!

பிரிவு-உறவு

நிரந்தர பிரிவு இருந்தால் வாழ்கையில்
ஏற்படும் சரிவு உறவின் பேரழிவு

தற்காலிகமாக பிரிந்து மறுபடியும்
ஒன்றாகும் போது அந்த பந்தம் பலப்படும்
உறுதியான மகிழ்ச்சியான உறவாய்

அன்பு முடிச்சில் ஒன்றானோம் ஓர் உயிராய்

எனக்கு எது பிடிக்கும் என்று சொல்ல தெரியாது -ஆனால்
உனக்கு எது பிடிக்கும் என்று மட்டும் தான் எனக்கு தெரியும்

என்னை என்னால் மறக்க முடியும் - ஆனால்
உன்னை என்னால் மறக்க முடியாது

எனக்கு பசித்தாலும் பொறுத்துக்கொள்வேன் - ஆனால்
உனக்கு பசி எடுத்தால் நான் துடித்து போவேன்

எனக்கு உடல் நிலை சரி இல்லாவிடில் வருந்தமாட்டேன் - ஆனால்
உனக்கு முடியவில்லை என்றால் நொறுங்கி போவேன்


நீ என்னில் கலந்த அந்த நொடி நான் சொர்க்கத்தில் வாழ்வது போல இருந்தது

உனக்காக மட்டுமே என் வாழ்க்கை அதுவே எனது பாக்கியம்


உனக்காக துடிக்கும் என் இதயம் இடைவழியே இல்லாமல் சொல்லுகிறது உன் பெயரை

நாம் ஈருடலாய் இருந்தாலும் நம் அன்பு முடிச்சில் ஒன்றானோம் ஓர் உயிராய்

புளிக்கும் மாங்காய் பழுத்தது மாம்பழமாய்

புளிக்கும் மாங்காயான என் இதயம் பழுத்தது !!

இன்று அழகாய் தித்திக்கும் மாம்பழமாய்!!

உந்தன் அழகிய தரிசனத்தில் நானும் பழுத்தேன்!!

காயில் இருந்து பழமாய் என்ன ஒரு மாற்றமோ !!

உன் திறமையை உணர்ந்துகொள்

உனக்குள் தான் நான் இருக்கிறேன்
உன்னோடு தான் நான் பிறந்தேன்

உன்னில் தான் வளர்கிறேன்
என்னை தெளிவாய் உணரந்துக்கொள்

உண்மையை அழகாய் புரிந்துக்கொள்
என்னை நீ ஒளிக்காதே மறக்காதே

வேண்டாம் என்று ஒதுக்காதே
நீ என்னை முழுமையாய் உணர்ந்து

அயராது முயன்றால் உனக்குள்
வளரும் விலைமதிப்பான பொக்கிஷம் நான்

என்னவென்று புரியவில்லையா
அதன் அருமையை நீ இன்னும் உணரவில்லையா

அது உன் திறமை என்னும் செடி
அதில் என்றுமே இல்லை வெறுமை

உனது திறமையை உரிய காலத்தில் பயிர் செய்
அதன் விளைச்சலை அபாரமாய் அள்ளு

உலகுக்கு தெரியும் நீ யார் என்று
உன் திறமையும் என்னவென்று

உன் திறமையை அனுதினமும் வளர்த்தால்
நீ விண்ணைதொடுவாய் சாதனை படைக்க

சோம்பேறி என்னும் அழுக்கை
சலவை செய்து சுறு சுறுப்பாய் கிளம்பு

நீ எந்த வகையிலும் குறைந்தவனில்லை
சாதிக்க பிறந்தவன் என்ற நம்பிக்கையில் கிளம்பு

தோல்வி என்னும் புழுவை உரமாக்கு
உன்சாதனையை பூத்துகுலுங்கும் மரமாக்கு

உன் திறமையை ஒரு புதுவித கௌரவமாக்கு
பின் வரும் உன் பெயரேழுத்தில் அடைமொழியாய்

அழகாய் காட்டு நீ யார் என்று உணர்த்து

இயற்க்கை அழகியே

உன் பார்வைபட்ட இடமெங்கும்
வண்ணத்து பூச்சிகளின் வரவு

உன் காலடிபட்ட இடத்தில்
மின்மினிகளின் ஆரவாரம்

உன் கைதொட்ட இடமெங்கும்
பூக்கள் பூத்துக்குலுங்கும் பூந்தோட்டமாகும்

உன் சிரிப்பு சத்தத்தில் சிட்டு குருவியும்
கருங்குயிலும் சிந்து படிக்கும் இனிமையாய்

உன்னால் இத்தனை அழகிய மாற்றம்
இந்த இயற்கையின் போக்கில்

நீ என்ன இயற்கையின் தேவதையா
இல்லை பூமியின் தேவலோக மங்கையா

இயற்க்கை அழகியே உந்தன் ஒவ்வொரு
அசைவும் ஓசையும் இயற்கையை

சிலிர்க்க வைக்கிறது ஆனந்தமாய்
மகிழ்ச்சியின் திகட்டும் திளைப்பில்

அனைத்து உயிர்களும் உந்தன் உறவில்
அழகிய உருவில் ஒரு பரிமாணமாய்

சந்தோஷ களிப்பில் அங்கும் இங்குமாய்
மேலும் கீழுமாய் குதிக்கிறது

சொர்க்கலோக மங்கையே நீ
உலகிற்கு கிடைத்த அழியா பரிசே

நீ வாழ வேண்டும் ஆயிரம் வருடம்
அழிவில்லாமல் இயற்கையின் சொத்தாய்

உன் ரசிகையாய்

உன் நேசக்கரங்கள் என்னை தொடுகையில்
தாய்மையின் அருமை புரிகிறது

உந்தன் மழலை சிரிப்பில் என் மனது
விண்ணை தாண்டியும் பறக்கிறது

உன்னை மடியில் வைத்து
தாலாட்டுகையில் இனிக்கிறது என் வாழ்கை

உந்தன் கண்ணை சுருக்கி புருவத்தை தூக்கி
உயர்த்திபார்க்கிறாய் அனைவரையும் உன்னிப்பாய்

தூக்கத்திலும் சிரிக்கிறாய் இன்பத்தில் மிதக்கிறாய்
உன்னை நான் ரசிக்கிறேன் உன் ரசிகையாய்

உந்தன் அழகு

நிலவின் அழகும் பொய்யாகும்
உந்தன் இதழின் புன்னகையால்

சுட்டெரிக்கும் சூரியனும்
பனிபோல் உருகும் உந்தன்
கடை விழி பார்வைபட்டால்

உறவு வடிவம்

வட்ட உறவு எந்நேரமும்
உதவும் எதிர்பார்ப்பிலாமல்

சதுர உறவு சில சமயம்
உதவும் சில எதிர்பார்ப்பில்

முக்கோண உறவு எதிர்பார்ப்பை
மூலதனமாய் வைக்கும்

ஒரு கோடு உறவோ எப்போது வேணாலும்
முறிந்து போகும் பிடிப்பிலாமல்

உறவு வட்டத்தை வளர்ப்போம்
எந்த எதிர்பாப்பும் இல்லாமல்

நட்பு ஆணிவேர்

நட்பு என்னும் ஆணிவேர்
ஆழமாய் வேருன்றி இருந்தால்
அதன் வளர்ச்சியும் வளமும்
என்றுமே செழிப்பாய் இருக்கும்

பாரம்பரிய சேலை-தேவதையாய் காட்டும்

அழகு மங்கையும் பேரழகாய் ஒளிர்வாள்
பாரம்பரிய சேலை என்னும் ஆடை உடுத்துகையில்

கூரை சேலையோ இல்லை நூல் சேலையோ
பட்டு சேலையோ இல்லை எந்த சேலையோ

விலை குறைந்த மலிவான சேலையோ
இல்லை விலை மதிப்பான சேலையோ

எந்த சேலை ஆனாலும் ஒரு பெண்ணை
அவளின் பெண்மையின் தன்மையை கூட்டி

அழகு மெழுகு பொம்மையாய்
மின்னும் தெய்வீக கலையாய்

வையகத்தில் பூத்த பூவாய்
வானின் தேவதையாய் காட்டும்

அவள் உடுத்தும் சேலை
அழகுக்கு அழகு கூட்டும்

அவள் புன்னகையோ அதனில் கலந்து
ஒரு வித சிலிர்ப்பூட்டும் குளிர்ச்சியாய்

சேலையின் அழகு பெண்ணை
அடைகயிலே அதன் பெருமை கூடுகிறது

இல்லையேல் அதுவும் ஒரு காட்சி பொருளே
துணிக்கடையில் என்றென்றுமே

மழலையின் வரவு உலகிற்கு

பிறந்த பச்சிளம் குழந்தையை ஒரு தாய்
பார்த்து ரசிக்கையில் அவள் கவிதாயினியாகிறாள்

உந்தன் முதல் வரவு
இந்த மண்ணில் வருகையில்

என் வலியும் மறைந்து துன்பம்
அனைத்தும் அப்படியே துலைந்து

என்னில் உன்னால் ஆனந்தகண்ணீர் நிறைந்து
இன்பம் என்னும் ஊற்று பெருகி குவிந்து

உனக்கு உவந்து அமுதை பரிசளிப்பேன்
என் உதிரத்தை ஆரோக்கியமான தாய்ப்பாலாய்

என் கண்மணியே நீ வந்தாயடி மகாராணியாய்
என் வாழ்கையை முழுமை பெற செய்தாயடி

காரமான மொரு மொரு துக்கடா - சாப்பிட வாங்க

மாலை நேர வேளை பசிக்குது எனக்கு
அதுவும் மொரு மொரு பலகாரம் வேண்டும்

கொஞ்சம் காரம் தூக்கலாய் கேக்குது
என் மனசு சொல்லுது அதிரடியாய்

நொடியில் தயாரிக்கும் கரகர மொறு மொரு
துக்கடா இருக்கு என்ன கவலை இனி

கிடைத்தது ஒரு யோசனை ருசித்து சாப்பிட
மொரு மொரு துக்கடா சாப்பிடலாம் நேக்கா

காரமும் இருக்கும் கொஞ்சம் ஷோக்கா
இரண்டு கப்பு மைதா மாவு எடுத்தேன் வேகமாய்
கொஞ்சமாய் போட்டேன் மணக்கும் பெருங்காயதூளை

அரை டீ- ஸ்பூன் மிளகாய் தூள்
தூவினேன் அதில் மெல்ல மெல்ல

வேண்டும் என்றால் காரம் இன்னும் தூக்கலாய்
கூட்டிக்கொள்ளலாம் விருப்பத்திற்கு ஏற்ப

தேவையான அளவு பொடித்த உப்பும்
இரண்டு டீ- ஸ்பூன் வெண்ணையும் சேர்த்தேன்

இல்லையேல் நெய் சேர்த்து கொள்ளலாமே
அதற்கு பதிலாய் தெளிவாய் நாம்

இப்பொது தண்ணீர் சேர்த்தேன் கொஞ்சமாய்
சப்பாத்தி மாவு பதத்தில் நான் பிசைய பிசைய
என் நாக்கு ஊறியது ருசியை சுவைக்க ஆவலாய்

இப்பொது சப்பாத்தி உருண்டை
தயார் செய்தேன் மைதா கலவையில்

ஒருவித கைவித்தை நான்
செய்கையில் மனம் பறக்குது

சீக்கரம் செய்யடி பெண்ணே
என்று தான் துடிக்குது மெதுவாய்

ஒவ்வொரு உருண்டையும்
உருட்டி நான் தேய்க்க தேய்க்க

சப்பாத்தியில் கத்தி வைத்து
எனக்கு புடித்த வடிவில் கோடிட்டேன்

சதுர வடிவில் நான் அதிரடியாய் வெட்டி
வெய்த்துவிட்டேன் அழகாய் இருந்தது அது

இப்பொது அடுப்பில் நெருப்பு மூட்டி
இரண்டு கரண்டி எண்ணெய் எடுத்து

பொரிக்கும் அளவு ஊற்றி மிதமான
தீயில் வெய்தேன் பக்குவமாய்

எண்ணையும் காய்ந்தது வேகமாய்
குதிக்க தயாரானார்கள் மைதா படை வீரர்கள்

நான் நீ என்று போட்டி போட்டுக்கொண்டுதான்
எண்ணெய் குளத்தில் குதித்தார்கள் உப்புவதர்க்கு

உப்பி நிறம் மாறினார்கள் மெல்ல மெல்ல
அந்த அழகை நான் என்னவென்று சொல்ல

சிறிது திருப்பி போட்டேன் நான் அழகாய்
முழுதாய் வெந்ததும் மொரு மொருப்பு வந்ததும்

எடுத்தேன் மொரு மொரு கமகமக்கும் துக்கடா
துடுக்குத்தனமாய் தயார் ஆனது

சுட சுட காப்பியுடன் காரமான
மொரு மொரு துக்காடவும்

இதை எத்தனை நாளும் சேமித்து
வைத்து சாப்பிடலாம் கெட்டு போவதற்கு

வாய்ப்பில்லை என்று கூறலாம்
15 நாள் வரை வெய்த்து கொள்ளலாமே

உன்னை கண்ட நாள் முதலாய்

உன்னை கண்ட நாள் முதலாய்
என் இதயம் எங்கும் உன் நினைவுகள்

பழைய நினைவுகள் அனைத்தும் மறந்து
என் பல நினைவில் கொத்தாய் பதிந்து

கிடந்த நினைவலைகள் அனைத்தும் துறந்து
அது சற்று நேரத்தில் முற்றிலும் அடியோடு அழிந்து

உன்னை பற்றிய நினைவுக்குவியல்
என்னில் நிறைந்து என்னை கலைத்தது

கல்லையும் கரைத்தது உந்தன் ஆஜர்
என் மனது இன்று செய்யுது ஒரே பேஜார்

உன் வரவில் என் இதயம் சிலிர்க்கிறது
என் இதயத்தை முற்றிலும் உன் வாசமாக்கி

என்னை உன்னில் கலந்தாய் இனிமையாய்
உன் இதயத்தால் இப்படி ஒரு மாயவலையை விரித்து

உன் புன்னகை அம்பை எய்தி என்னை
உன் வசமாக்கினாய் ஒரு நொடியில்

என் நினைவில் வந்து என்னை வருடிவிட்டாய்
என்னை திருடிவிட்டாய் என் இதயத்திருடா

என்னை கிறங்கடிக்க செய்கிராயடி ....

என்னை கிறங்கடிக்க செய்கிராயடி


உன்னை காணும் அந்த நொடி
எனக்கு சொர்கமடி

உந்தன் புன்னகை நான் விரும்பி
உண்ணும் அமிர்தமடி

உன் விழியன் காட்சியாய் நான் மட்டுமே
இருக்க வேண்டுமடி

உன் இதழின் முத்தத்திணை மொத்தமாய் நானே
குத்தகைக்கு எடுத்தேனடி

உன் காதோர ஜிமிக்கியின் அசையவில்
என்னை ஆட்டிப்படைக்கிராயடி

உன் கன்னக் குழியில் நான் விழுந்து விழுந்து
எழுகிறேன் சலிக்காமல்தானடி

உன் முத்தான முத்துப்பற்கள் என்னை அழைக்காத
என்று ஏங்கி கிடக்கிறேனடி

என்னை கிறங்கடிக்க செய்கிராயடி
மாயக்காரியடி நீ

உனக்காக என் ஜென்மம் அடுக்கடுக்காய்
தொடர வேண்டுமடி கண்மணி

மங்கையர் தின வாழ்த்துக்கள் தோழிகளே

புது மங்கையாய் சாதிக்க பிறந்தவளே
சோதனையும் சாதனையாய் மாத்தும் தாரகையே

உந்தன் வரவு மண்ணிற்கு புதிய எழுச்சி
நீ செய்யும் ஒவ்வன்றும் நன்மையின் புரட்சி

மங்கையராய் நீ பிறக்க என்ன தவம்
செய்ததது இந்த அழகிய வையகம்

வீட்டிலே முடங்காமல் உலகையே
உன் கைக்குள்ளே அடக்கும் ஆற்றலால்

அனைவரையும் அசர வைத்தவளே
சமையலிலே பல வித ருசியும்

கலையிலே எண்ணிலடங்கா பல்கலையும்
விளையாட்டு துறையுளும் கணினி வளர்ச்சியுளும்

நாட்டின் பொறுப்பில் இருக்கும்
அரசியல் கடலிலும் மூழ்கி முத்தெடுத்துவலே

தைரியத்தில் நீ ஒரு ஜான்சி ராணியடி
ஊரை காக்கவும் களவுகளை தடுக்கவும்

காவல்துறையிலும் ராணுவத்திலும்
கப்பல்துறையிலும் விமானபடையிலும்
நீ எட்டிய இமயம் பிரம்மிக்க வைக்கிறது இன்றும்

கட்டிடங்களையும் வடிவமைக்கிறாய் உந்தன்
அழகையும் சிலை வடிக்கிறாய் ஓவியமும் தீட்டுகிறாய்
நல்ல காவியமும் கவிதையும் படைக்கிறாய்

திரைப்படமும் எடுக்கிறாய் கதையும் எழுதிகிறாய்
சேவையின் உருவே தாய்மையின் உறவே

சாந்தத்தின் ஸ்வரூபமே அன்பினாலும்
நல்ல பண்பினாலும் நீ மலர்கிறாய்

நீ இருக்கும் இடத்தில் வானவில்லின்
வர்ணஜாலங்கள் குடிபுகுந்து வண்ணமயாக்குகிறது

நீ அனைத்து துறைகளிலும் வைரமாய் ஜொலிக்கிறாய்

மங்கையாய் நீ பிறந்து இந்த உலகையே
பெருமையடைய செய்கின்றாய்

மங்கையர் தின வாழ்த்துக்கள் தோழிகள் அனைவருக்கும்

காதல் கைதியாய்

என் கனவிலும் நினைவிலும்
உயிரிலும் கலந்தவர்

என்னை மயக்கியே ஆக்கினார்
ஒரு காதல் கைதியாய்

அவரின் இதய அரண்மனையில் நான்
இன்றும் விடுதலை ஆகவில்லை

இன்ப வலியில் நான் லயித்து கிடக்கிறேன்
மாண்புமிக்க அரசனாய் ஆளுகிறார் என்னை

அன்பின் உருவாய் அவர் என்னிலும்
பாச உருவாய் அவர் உள்ளில் நானுமாய்

நாட்களை நகர்த்தி வாழ்கையை
ரசிக்கிறோம் நாங்கள் இருவருமாய்

உன் நிழலாய்

நீ நடக்கும் பாதை எல்லாம் !!

நான் தொடருகிறேன் சலிக்காமல் !!

உன்னிடம் நிஜத்தில் கலக்க ஆசையடா !!

ஆனால் நானோ வாடுகிறேன் !!

உன் நிழலாய் இன்று வரை !!

நீ உணருவாயா என் கணவா !!!

நான் இங்குமாய் நீ அங்குமாய் வெவ்வேறு இடத்தில்
வேலையின் நிமித்தமாய் நீ வெளியூரில் வசிக்கையில்
நான் உள்ளூரில் புலம்புகிறேன் அழுகையின் இசையில்
சோகமே என் ராகமாய் என் வாழ்கையில் தொடருகையில்
அதை கவிதை நடையில் சொல்ல முயல்கையில்
வார்த்தைகள் வருத்தமும் அழுத்தமும் பின்னி கலக்கையில்
பின்னலாய் வருகிறது வலியான வரிகளாய் உன்னை நோக்கி
நீ உணருவாயா என் கணவா

நீ இல்லா இடத்தில் நான் தனிமையில்
என்னை சுற்றி ஆயிரம் சொந்தம் இருக்கையில்
இன்றும் நான் ஒரு வித வெறுமையில்
உணர்கிறேன் தனிமையை ஒரு வித விரக்தியில்
இப்படி உன் நினைவில் நான் தவிக்கையில்
என்னையே தேற்றிக்கொள்ள முயல்கையில்
ஆறுதலாய் இருக்கிறேன் நம் நினைவு அலைகளில்

நான் உன்னை காணும் நாளை எதிர் நோக்குகையில்
அதிலும் ஒரு ஆனந்தம் தான் எனக்கு வருகையில்
என்னை அறியாமல் உன் மேலிருக்கும் காதலை ரசிக்கையில்
அன்பின் அளவு அளவில்லாமல் அனுதினமும் கூடுகையில்
நாம் இவ்வளவு நாள் பிரிந்திருந்த வலியும் மாறுகையில்
நம் கண்ணீரும் முத்தங்களும் பரிமாறுகையில்
உந்தன் கையால் என்னை நீ அணைக்கையில்
பாசத்தால் என்னை நீ அரவணைக்கையில்
இதன் பின் வரும் அனைத்து நாள்களில்

உன்னை பிரிய எனக்கு தைரியம் இல்லாமல் இருக்கையில்
என்னால் முடியாது இந்த பிரிவு என்று நான் மொழிகையில்
நீ ஆனந்த கண்ணீருடன் எந்தன் பேச்சை கண்டு ரசிக்கையில்
நானும் நாணம் கொள்கிறேன் மெல்ல உந்தன் பார்வையில்

காதல் ரசம் கலக்கட்டும் நம்மில் வெகு விரைவில்
உன் அன்பின் சாறு என்றுமே தித்திப்பான அமுதம்
நீ கிடைக்க என்ன புண்ணியம் செய்தேனோ நான்

உந்தன் காதல் பைந்தமிழ்(Romantic Love)

உந்தன் தோளிலே நான் சாய்கிறேன்
கொஞ்சம் கிறங்கி கொஞ்சம் மயங்கி

நீ மெல்ல தயங்கி என் காதோரமாய்
ஏதோ மோகமாய் ஒரு வித வேகமாய்
அடங்கா தாகமாய் அன்பே ஆருயிரே என்று

நீ கூற கேட்கையில் எனக்குள்ளாய்
ஒரு புதுவித குளிர்ச்சி அனலாய் பரவ
அது என்னில் அங்குமிங்குமாய் உலவ

உன் விரல் நுனியால் மெல்லமாய்
எந்தன் கூந்தலை நீ தொடுகையில்
உந்தன் கை என்னில் படுகையில்

மெல்லிய வீணையின் இசையை
என் நாணத்தால் உன் வாசிப்பால்
அதன் இசையை உணர்கிறேன்
நீ மீட்டும் அழகை ரசிக்கிறேன்

இன்பம் என்னும் தேன்சுவையாய்
திகட்டாத தித்திப்பாய் என்னை உன்னிலாய்
உனக்குள் நானாய் நானும் நீயுமாய்
நாமாய் மாறுகையில் என்னை ஏதோ
இழுக்கிறதே வலைக்கிறதே மென்மையாய்

உந்தன் காதல் பைந்தமிழ் நான்
கற்று கொள்கையில் அசத்தலாய்
தோன்றுது ஒரு பூரிப்பு கொண்டாட்டம்

Monday, November 8, 2010

என் இதயத்திருடா

உன்னை கண்ட நாள் முதலாய்
என் இதயம் எங்கும் உன் நினைவுகள்

பழைய நினைவுகள் அனைத்தும் மறந்து
என் பல நினைவில் கொத்தாய் பதிந்து

கிடந்த நினைவலைகள் அனைத்தும் துறந்து
அது சற்று நேரத்தில் முற்றிலும் அடியோடு அழிந்து

உன்னை பற்றிய நினைவுக்குவியல்
என்னில் நிறைந்து என்னை கலைத்தது

கல்லையும் கரைத்தது உந்தன் ஆஜர்
என் மனது இன்று செய்யுது ஒரே பேஜார்

உன் வரவில் என் இதயம் சிலிர்க்கிறது
என் இதயத்தை முற்றிலும் உன் வாசமாக்கி

என்னை உன்னில் கலந்தாய் இனிமையாய்
உன் இதயத்தால் இப்படி ஒரு மாயவலையை விரித்து

உன் புன்னகை அம்பை எய்தி என்னை
உன் வசமாக்கினாய் ஒரு நொடியில்

என் நினைவில் வந்து என்னை வருடிவிட்டாய்
என்னை திருடிவிட்டாய் என் இதயத்திருடா

இயற்க்கை அழகியே

உன் பார்வைபட்ட இடமெங்கும்
வண்ணத்து பூச்சிகளின் வரவு

உன் காலடிபட்ட இடத்தில்
மின்மினிகளின் ஆரவாரம்

உன் கைதொட்ட இடமெங்கும்
பூக்கள் பூத்துக்குலுங்கும் பூந்தோட்டமாகும்

உன் சிரிப்பு சத்தத்தில் சிட்டு குருவியும்
கருங்குயிலும் சிந்து படிக்கும் இனிமையாய்

உன்னால் இத்தனை அழகிய மாற்றம்
இந்த இயற்கையின் போக்கில்

நீ என்ன இயற்கையின் தேவதையா
இல்லை பூமியின் தேவலோக மங்கையா

இயற்க்கை அழகியே உந்தன் ஒவ்வொரு
அசைவும் ஓசையும் இயற்கையை

சிலிர்க்க வைக்கிறது ஆனந்தமாய்
மகிழ்ச்சியின் திகட்டும் திளைப்பில்

அனைத்து உயிர்களும் உந்தன் உறவில்
அழகிய உருவில் ஒரு பரிமாணமாய்

சந்தோஷ களிப்பில் அங்கும் இங்குமாய்
மேலும் கீழுமாய் குதிக்கிறது

சொர்க்கலோக மங்கையே நீ
உலகிற்கு கிடைத்த அழியா பரிசே

நீ வாழ வேண்டும் ஆயிரம் வருடம்
அழிவில்லாமல் இயற்கையின் சொத்தாய்

Sunday, October 24, 2010

தலை தீபாவளி

தலை தீபாவளி

வர போகுது தடாலடி தீபாவளி
புது தம்பதியினருக்கு இது தலை தீபாவளி
மாப்பிள்ளை முறுக்கில் புது மணமகனும்
தேவதையின் வரவாய் அந்த புது பெண்ணும்
அவள் தாய் வீட்டு அழைப்பை ஏற்று
செல்ல தயார் ஆகிறார்கள்

அவளோ சிறகடித்து வானில் பறக்கிறாள்
தன் தாய் வீட்டிற்கு போவதற்கு
தாயின் அன்பும் தந்தையின் பாசமும்
கிடைத்தது மணமாகும் முன்பு

இப்போதும் கிடைக்கிறது ஆனால்
பெற்றோரை பிரிந்து வேறு மாநிலத்தில்
வாழுகிறாள் வாடுகிறாள் அவர்களின் பிரிவில்
ஆனால் இன்றோ தீபாவளி கொண்டாட்டம்
அந்த சந்தோஷத்தில் துயரை மறக்கிறாள்

மாப்பிளையும் புது பொண்ணும்
அவள் வீட்டை அடைந்தார்கள்
இல்லை இல்லை சொர்க்க
வாசலையே அடைந்தார்கள்

பெற்றோரும் அவள் தங்கையும்
அவர்களை வரவேற்க அங்கு
ஆனந்த கொண்டாட்டம் ஆரவாரமாய்
ஆனந்த கண்ணீரில் நடக்கிறது

இனிப்பு பலகாரம் கொடுத்து
இன்பத்தை குடுத்தால் தாய்
தங்க மோதிரத்தை பரிசளித்து
மாப்பிளையை கொஞ்சம் தூக்கலாக
கவனித்தார் பெண்ணின் தந்தை

மாப்பிளையும் ஆச்சிரியத்தில் மிதக்க
அந்த மோதிரத்தை புது பெண்ணின்
அழகிய மெல்லிய விரலில்
மாப்பிளை மெல்ல மாட்டினார்
இதை கண்டு பெண்ணின் பெற்றோர்
புரிந்து கொண்டனர் தன் மகளின்
வாழ்க்கை சந்தோஷமாய் போகிறது என்று

அவளும் அவரின் அந்த காதலில்
உருகினால் அழகாய் அன்று
பெண்ணின் தங்கையோ அவர்கள்
இருவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தால்
கை கடிகாரத்தை பரிசளித்தால்
அவர்களுக்கு இன்னும் ஆச்சிரியம்
அதை இருவரின் கையில் மாட்டிவிட்டால் அவள்

இருவரும் எழுந்து நின்று
சாமி அறைக்கு சென்று கடவுளிடம்
நன்றி சொன்னார்கள் இந்த நாளிற்கு
பின் பெண்ணின் பெற்றோரிடம்
இருவரும் சென்று பணிந்து
ஆசிர்வாதம் வாங்கினார்கள்

அவளின் பெற்றோரும் அவர்களுக்கு
புது ஆடை பரிசளித்தார்கள் தம்பதியினருக்கு
தலை தீபாவளி என்பதால் கொஞ்சம்
கவனிப்பு தூக்கலாக இருந்தது
அன்றைய நாளின் தொடக்கம்

பின் காலை உணவு உண்ண தயாரானார்கள்
தாயின் கை பதத்தில் சாப்பிட்டு கொல்லை நாளானது
அவளின் எதிர்பார்ப்பு இன்று பூர்த்தியாகபோகுது
மல்லிகை பூ இட்டிலியும் கார சட்டினியும்
கமகமக்கும் ஆட்டுக்கறி கூட்டும் பரிமாறப்பட்டது
தித்திப்பான மஞ்சள் நிற கேசரியுடன்

காலை உணவு உண்டு கொஞ்சம்
அரட்டை அடித்து கொண்டு இருந்தார்கள்
பின் பெண்ணோ தாயிடம் நலம் விசாரிக்க
தாயும் தடபுடலாய் மதிய உணவை தயார்
செய்துகொண்டே உரையாடினால் அவளிடம்

இவள் உதவ வர தாய் தடுத்தால்
போய் கணவரை கவனி என்று கூறி
தந்தையோ வாழை இலை வாங்க சென்றார்
அரட்டை அடித்ததில் நேரம் சென்றது

பட பட பட்டாசு வைத்து நேரத்தை கழித்தார்கள்
பட்டாசு லக்ஷ்மி வெடி காத்து கிளியும் வெடிகள் போட்டு
மகிழ்ந்தனர் அனைவரும் ஆனந்தமாய்

விருந்து தயார் ஆனது நாக்கில் எச்சி ஊருது
வாசனை மூக்கை துளைக்கிறது நன்றாய்
மிளகு ஆட்டுக்கறி வறுவல் ,ஆட்டுக்கறி கூட்டு
கோழி கூட்டு மிளகு போட்ட முட்டை வறுவல்
சத்தான ஈரல் கூட்டு ஆட்டுக்கறி குழம்பு
கோழி சூப்பு தக்காளியும் எண்ணெயும் மிதக்க

ஆரோக்கியமான புதினா துவையல்
மொறு மொறு அப்பளம் கலர் கலர் வடகம்
சேமிக்க ரசமும் தயிரும் உளுந்த வடையும்
அப்பறம் இனிப்பு பலகாரமும் இல்லை எல்லாம்
இப்படி நிரம்பி வலிய மனமும் வேட்டையாடியது
இந்த படையலை சரம் வாரியாக த்ரிப்த்தியாய்

கொஞ்சம் மனம் விட்டு அனைவரும் பேசி
அரட்டையடித்து குட்டி தூக்கம் போட்டு
மாலை காபி குடித்து கிளம்ப தயார் ஆனார்கள்
இப்போது கொஞ்சம் அந்த பெண்ணிற்கு

கண்ணீர் வந்தது ஆனால் இந்த நாள்
அவளுக்கு சந்தோஷத்தின் மணமாய்
இருந்தாதால் அவள் கண்ணீரை கட்டுபடுத்தினால்
சந்தோஷமாய் கிளம்பினால் அனைவரிடமும்
சொல்லிவிட்டு சென்றால் மாமியார் வீட்டை நோக்கி

Friday, October 22, 2010

மலைப்பாம்பு வேட்டை

திடமான ரப்பர் உடம்புக்காரன்
வழ வழ வழவழப்புக்காரன்
உடம்பெல்லாம் அழகிய புள்ளி
ஆனால் கோலம் போட முடியாது
வளைந்து நெளிந்து ஓடுவான்
வயக்காட்டில் மட்டும் வேகமாய்
இறை தேடும் வயலில்
கிடைக்கும் அதற்கு அழகிய படையல்
அது போகும் வழியெல்லாம் புதையல்
அது உண்ணும் அழகிய கலையில்
வயக்காட்டில் விளைச்சலும் கூடும்
சில சமயம் மனிதனுக்கு ஆபத்தும் நேரும்
இதுவோ சாதா மலைப்பாம்பு
மலைப்பான கொளுத்த மலைப்பாம்பு
நகரும் அழகாய் மெல்ல மெல்ல
ஒரு பெரிய மரமே நகருவது போல
அதன் அசைவு கொஞ்ச நேர முடக்கம்
ஒரு செத்த பிணம் போல நடிக்கும்
ஒரு பாறை போல அசைவில்லாமல் கிடக்கும்
அதனை அறியாமல் வரும் அந்த வழியில் ஒரு இறை
அது அறியாது இருக்கும் தனக்கு கிடைக்கபோவது சிறை
இறையின் கவனம் சிதறும் சில நொடிகள்
அதை லாவகமாக கையாளும் மணித்துளிகள்
மலைப்பாம்பு சீறிபாயும் ஒரு அபாயத்துடன்
அந்த இறையின் ருசியில் அது நகராமல்
சிறிது ஓய்வு எடுக்கும் பலத்த வேட்டையில்
கொழுத்த அழுத்த ருசித மலைப்பாம்பு
அடுத்த படையில் வேட்டையை
சில நாட்களிலோ வாரங்களிலோ தொடங்கும்
இப்படியே அதன் வாழ்க்கை செல்லும்
அதன் போக்கில் மனிதனை
வேட்டை ஆடாமல் இருந்தால் சரி
மனிதர்கள் ஜாக்கிரதை இனி

Tuesday, October 19, 2010

முதல் ஸ்பரிசம்

கருவறை தோட்டத்து மொட்டு
அழகிய பிஞ்சு சிட்டு

உலகில் அடியெடுத்து வைத்து
மலர்ந்தது மனம் கமல

பூத்த பூவின் விரலின் ஸ்பரிசமும்
அழகிய மனமும் அன்பின் மேன்மையும்

பிஞ்சின் தாயின் கையை தொடுகையில்
ஆனந்த கண்ணீரால் நிறைகிறது பாச திளைப்பில்

அதன் ஸ்பரிசம் தந்தையின் மேலும்
மற்ற உறவு வட்டம் மேல் பட்டதும்

அந்த இடமே மின்னுகிறது வைரமாய்
காசுகொடுத்தாலும் கிடைக்காத ஸ்பரிசம்

அந்த அழகிய முதல் முத்தான ஸ்பரிசம்
நம் பிஞ்சு குழந்தையின் வசம்

ஒரு வித அழகிய மென்மையான பூவின் வாசம்
வரமாய் கிடைக்கும் முதல் ஸ்பரிசம்

Friday, October 1, 2010

விடுமுறையிலோ பல விதம்

விடுமுறையிலோ பல விதம்
அதில் ஒரு விதம் வார வாரம்
ஒரு வித ஆரவாரம் சனி ஞாயிறில்
வாரத்தின் இறுதியில் வேலையில்
இருந்து கிடைக்கும் விடுதலை
முறை தவறாமல் வரும் விடுமுறை

வருஷ தொடக்கமாம் வருஷ பிறப்பில்
கிடைக்கும் விடுமுறை வேகமாய்
காலண்டரைதேடும் நம் கண்கள்
அடுத்த விடுமுறைகளை பட்டியலிட
கிடைத்தது இதற்கு அங்கு விடை

போகியில் தொடங்கி பொங்கலாய் வந்து
இன்பத்தை தந்து மாட்டு பொங்கலாய்
வரும் விடுமுறை கொண்டாத்தின்
உச்சக்கட்டம் தித்திக்கும் பொங்கலுடன் தானோ

இந்த விடுமுறை போதவில்லையோ நமக்கு
விநாயகர் சதுர்த்தியும் கிருஷ்ண ஜெயந்தியும்
ஆயுத பூஜையும் வந்தால் அதுவும் பலகார
படையலுடன் கிடைக்கும் விடுமுறையாம்

தேசத்தின் பெருமைக்காக நாம் இந்தியன்
என்று சொல்லும் விதத்தில் சுதந்திர தினமும்
குடியரசு தினமும் கொடுக்கும் கம்பீர விடுமறை

விடுதலைக்காக பாடு பட்ட பலரின்
பிறந்தநாளும் காந்தி ஜெயந்தியும்
புனிதாமான விடுமுறையாம்

பட பட பட்டாசுகளும்
புஷ் புஷ் புஷ்வானமும்
சர சர சரவேடியும் பல வண்ணமயமாய்
ஒளிமயமாய் இருக்கும் ஆக்ரோஷமான
இனிப்பு பலகாரங்களின் ஆரவாரத்துடன்
தீபாவளி விடுமுறை

இன்னும் திடீர் திடீர் என்று முளைக்கும்
போராட்ட விடுமுறை இயற்கை சீற்றம் விடுமுறை
கலவர விடுமுறை தீர்ப்பு விடுமுறை
அந்த விடுமுறை இந்த விடுமுறை

மொத்தத்தில் அனைவருக்கும் கொண்டாட்டம்
விடுமுறை என்றால் ரெக்கை கட்டி பறக்குது
மனசு அங்கும் இங்குமாய் ஐ ஐ ஜாலி என்று

வருஷம் முழுசா கொட்டிகிடக்கது விடுமுறை
அள்ளிக்கோ கிள்ளிகோ விடுமுறையை என்று
கூவத்தான் செய்யுது இந்த மனம்

அய்யோ அய்யோ என்ன சின்னபுள்ள தனமா இருக்கு
நமக்கு விடுமுறைய கண்டாமட்டும்
ஏன் இந்த குஷியோ தெரியல

Monday, September 27, 2010

உன் காலடி மண்ணோ

உன் காலடி மண்ணோ
எனக்கு மணக்கும்
இல்லை மணமயக்கும் சந்தனம்

நம் காதலின் சின்னம்

நீ தவற விட்ட
உன் அழகிய கைகுட்டை
எனக்கு நம் காதலின் சின்னம்

Sunday, September 26, 2010

காக்க காக்க -கேள்விகனைகளால் தாக்க

ஒரு வித தயக்கம் எனக்கு பசி மயக்கம்
வேலை கிடைக்குமோ என்ற கிறக்கம்
மனதிலே பூகம்பமாய் நில நடுக்கம்

என் பெயரை அங்கு கூவ
நானும் திணறி அடித்து ஓட
கேள்விகனைகளால் பெரிய அதிகாரி தாக்க
நானும் நாக்கு மூக்க நாக்கு மூக்க
என்று விடையால் தாக்க தக்க

அந்த வேல் முருகனோ என்னை காக்க காக்க
அதிகாரி என்னை சொன்னார் வெளியில் பொறுக்க
நானும் காக்க காக்க என்று படபடக்க

விரதம் இருந்தேன் மாலை வரைக்கும் பசிக்க
என்னை கூப்பிட நான் பொறுக்காமல் பறக்க
நினைத்த வேலையும் கிடைக்க கிடைக்க
நான் இன்பத்தில் என்னையே மறக்க மறக்க
ஆனந்தத்தில் அங்கும் இங்குமாய் குதிக்க குதிக்க

கடவுளுக்கு நன்றி சொல்லி சொல்லி
நான் வீட்டுக்கு ஓடினேன் துள்ளி துள்ளி
என் இன்பத்தை அனைவருக்கும் அள்ளி அள்ளி
இனிப்பாய் தந்தேன் இந்த கள்ளி கள்ளி

Thursday, September 23, 2010

உன் முகம்-என்ன விந்தையோ இது

முகம் கழுவாமல் உன்னை இப்படி
பார்க்கயிலே அந்த சூரியனும் சந்திரனும்
ஓடி ஒளிகிறது உன் அழகில்

நீ முகம் கழுவினால் அந்த
செந்தாமரையும் உன் அழகை
கண்டு நாணி தலை குனிகிறது
ரோஜாவும் மலர மறுக்கிறது

என்ன விந்தையோ இது

Saturday, September 18, 2010

உன் சரளமான பேச்சில்

நான் சொல்ல வார்த்தைகள்

இல்லாமல் திணறுகிறேன்

உன் சரளமான பேச்சில்

உன் காலடி

உன் காலடி

கடலில் படுகையில்

கடல் நீரும் தித்திக்குது

நீ அடிமேல் அடி வைக்க

நீ அடிமேல் அடி வைக்க

கடல் அலையும்

உள் வாங்குகிறது உன் அழகில்
நீ மழையில் நனைகையில் எனக்கல்லவா
ஜலதோஷம் புடிக்கிருது

நீ கடலில் நனைகையில் எனக்கல்லவா
காய்ச்சல் வருகிறது

நீ மலை எறினால் எனக்கல்லவா
கால் வலிக்கிறது

Friday, September 17, 2010

நீ என்னிடம் சரளமாக பேசுகிறாய்
ஆனால் என்னிடம் வார்த்தைகள்
அங்கும் இங்குமாய் சிதறி ஓடுகிறது
கவிகளின் படைப்பில்
உண்டாக்கிய செங்கல்

தமிழ் சந்தங்களில்
உண்டாக்கிய சிமிண்ட்டும்

எதுகை மோனையாய்
அடுக்கு அடுக்காய் வைத்து

சலிச்சு எடுத்தேன்
ரெட்டை கிளவியை

நெரு நெரு கல்லாய்
கருத்துக்குகள் பல போட்டு

இவை அனைத்தையும்
கலந்தேன் லாவகமாய்

சிலை வடிக்கும் கலை போல்
பார்த்து பார்த்து செதுக்கி செய்தேன்

அழகிய கவிதை மாளிகையை
தெள்ள தெளிவாய் மின்னும் வைரமாய்
ஊட்டியின் குளிரும் தோற்று போகும்
உந்தன் குளிர்ந்த பேச்சில்

ஆந்திராவின் காரமும் தோற்று விடும்
உந்தன் கோப பார்வையில்

அனைத்து ஊருமே தோற்று போகும்
உந்தன் நவரச நடிப்பில் என் அன்பு கணவா
நீ கண்ணில் பட்ட அந்த நொடி
என் மனதில் பட பட சரவெடி

நம் காதல் சங்கமம் ஆன பொழுது
ஒரு மொட்டு பூவாய் மலர்ந்தது

நம் வாழ்க்கை மணக்கிறது
வாடாத வாடா மல்லியாய் இன்றும்
என் வாழ்க்கை எழில்
மிகுந்த சோலையாய்

இருக்கும் என்றும் உன்
முகமலர்ச்சி கண்டால்

என் முகமும் அன்பால்
மலரும் மணம் கமழும்

என்றும் என்றேன்றும்
தொடர்ந்தால் சுபமே
அழகனே உன் ஓர பார்வையை
ரசிக்க தான் ஆசை

ஆனால் என் நாணம்
என்னை நாண செய்கிறது
ரகசிய போலீஸ் போல
வந்தாய் என் மனதை
திருடும் கள்வன் ஆனாய்
நீ போலீசா இல்லை திருடனா
உன்னுடனே இந்த ஜென்மம் முடிய
ஆசை பட்டேன் என் பாக்கியமாய்
மாசில்லா என் அன்பை சொல்ல
பூங்காற்றை தூது அனுப்பி
நீ சூடா மலர்
உன் கூந்தலில் தஞ்சம்
அடைய என்னிடம் தூது வந்தது

நீ என்னை கடக்கும் தருணம்

நீ என்னை கடக்கும் தருணம்
உணர்கிறேன் ஒரு வித பூவின் மணம்

உன்னிடம் உள்ள மணம்
என்னை சொக்க வைக்குதே தினம் தினம்
சிறி சிறு எறும்பு
துரு துரு எறும்பு

சுறு சுறு எறும்பு சுர் சுர்
என்று கடிக்குது அழகாய்

நமையும் சுறுசுறுப்பாய்
ஆக்குது சுருக்குனு கடித்து

ஒரு சில நிமிடம் நாமும்
சுறு சுறுப்பாய் கத்துகிறோம்

சுர் சுர் வலியில் சுறு சுறுப்பாய்
நாமும் எறும்பு போல மாறுகிறோம்

அந்த சுறு சுறு எறும்பு
துரு துரு எறும்பு

என்ன சேட்டை செய்கிறது
இந்த சிறு சிறு எறும்பு

Thursday, September 16, 2010

உன் அக்கறையில்-அக்கரைக்கு

உன் அக்கறையில் காதல் கடலையும்
தாண்டுவேன் நான் அக்கரைக்கு
நீ என்னுடன் இருக்கிறாய் என்ற நம்பிக்கையில்

உன் இதய பூட்டு

நீ பூட்டு போட்டு பூட்டினாலும்
அந்த சாவியை தர மறுத்தாலும்

உன் இதயத்தில் நுழைவேன் கள்வா
என் அழகிய கணவா ஒரு துடுக்குத்தனமாய்

என் அன்பின் சாறு உன் பூட்டையும்
உருக்கும் பழசாறு
அது கனி அமுத அன்பின் புனித ரசம்

உன் இதயத்தின் சொந்தகாரியே நான்
என்னிடம் என்ன விளையாட்டு இது

என் அன்பில் மெழுகு போல் உருகுது அந்த பூட்டு
உன் இதய வாசலை திறந்து காட்டு

இது அதுவானால் விபரீதம்

பூங்காற்று புயல் ஆனால்

தென்றல் சூறாவளி ஆனால்

ஒரு சிறு தீ பொறி கொடூர தீக்குழம்பு ஆனால்

அமைதியான கடல் அலை சுனாமி ஆனால்

பசுமையான பூமி பிளக்கும் பூகம்பம் ஆனால்

அடை மழை பெரிய வெள்ளம் ஆனால்

விபரிதாமான விளைவுகளே மிஞ்சும்

இயற்கை அன்னையை பாதுகாத்தால்

பொங்கும் பசுமை எங்கும் இனிமை

இது ஒரு எழில்மிகு உண்மை

நாம் அதை காப்பது மேன்மை

புரிந்து கொள்வோம் இயற்கையின் அருமையை

Wednesday, September 15, 2010

உன் முள் காடு- மீசை

இன்ப முள்ளால் நித்தம் நித்தம் குத்துகிறாய்
இது ஒரு இன்ப வலி தான் என்று
அறிந்தும் அறியாமலும் ரசிக்கிறேன்

உன் முள் காடு எனக்கு மட்டும் இன்ப வீடு
இது என்ன மாயமோ எனக்குள் ஒரு புல்லரிப்பு
ஒரு வித ஆனந்த மோக பூரிப்பு

யார் யார் கையில்

என் வாழ்வின் தொடக்கம்
என் தாயின் கையில்

என் படிப்பின் தொடக்கம்
என் தந்தையின் கையில்

என் வேலையின் தொடக்கம்
எந்தன் நம்பிக்கையில்

என் காதலின் தொடக்கம்
எந்தன் உயிரே உன் கையில்

என் வாழ்கையின் முழுமை
கண்ணே நம் இருவரின் கையில்

என் நட்பின் தொடக்கம்
தோழிகளின் கையில்

என் ஆயுசின் முடிவின் தொடக்கம்
அந்த எமனின் கையில்

எனக்கு எது பிடிக்கும் என்று சொல்ல தெரியாது

எனக்கு எது பிடிக்கும் என்று சொல்ல தெரியாது -ஆனால்
உனக்கு எது பிடிக்கும் என்று மட்டும் தான் எனக்கு தெரியும்

என்னை என்னால் மறக்க முடியும் - ஆனால்
உன்னை என்னால் மறக்க முடியாது

எனக்கு பசித்தாலும் பொறுத்துக்கொள்வேன் - ஆனால்
உனக்கு பசி எடுத்தால் நான் துடித்து போவேன்

எனக்கு உடல் நிலை சரி இல்லாவிடில் வருந்தமாட்டேன் - ஆனால்
உனக்கு முடியவில்லை என்றால் நொறுங்கி போவேன்

நீ என்னில் கலந்த அந்த நொடி நான் சொர்க்கத்தில் வாழ்வது போல் இருந்தது
உனக்காக மட்டுமே என் வாழ்க்கை அதுவே எனது பாக்கியம்

உனக்காக துடிக்கும் என் இதயம் இடைவழியே இல்லாமல் சொல்லுகிறது உன் பெயரை
நாம் ஈருடலாய் இருந்தாலும் நம் அன்பு முடிச்சில் ஒன்றானோம் ஓர் உயிராய்

Tuesday, September 14, 2010

ஒரு தாயின் அவலம்

ஒரு தாயின் அவலம் இதை
கண்டால் மனமும் கலங்கும்

பள்ளிக்கு போனாள் குழந்தையுடன்
அந்த பிஞ்சை சேர்க்க

பள்ளியில் அவர்கள் சொல்லும் பீஸோ
தலையை சுற்றியது

இது பத்தாமல் பரீட்சை பீஸு
விளையாட்டு பீஸு அந்த பீசு
இந்த பீஸு எத்தனை பீஸு

இப்பயே கண்ணகட்டுது அம்மாவுக்கு
மயக்கமே வருது இந்த பண சுரண்டலில்

இங்கு தான் இப்படி என்றால்
அதே கொடுமை தான் எல்லா பள்ளியிலும்

என்ன செய்ய என்று விழி பிதுங்கி
நிற்கிர்ரர்கள் இன்றைய தாய்மார்கள்

இந்த அவலம் என்று முடியுமோ
கொடுமையான பணவேட்டையின் முடிவு

Monday, September 13, 2010

எனக்கு கிடைத்த சிகப்பு ரோஜாவே

எனக்கு கிடைத்த சிகப்பு ரோஜாவே
முள்ளால் நீ குத்தி காயப்படுத்தினாலும்
உன்னை நான் வெறுக்கமாட்டேன்

உன் இதழின் தேன் சாரம்
என் மனதின் ஓரம் சலனத்தை
ஏற்படுத்தும் காரம்

உன் இதழின் மணம்
என் மூச்சில் கலந்த வாசம்
என்றுமே அது என் சுவாசம்


நீ துவண்டு வாடினால்
என்னால் வாழ முடியாது
நானும் வாடுவேன் சருகாய்

உன் வாழ்க்கை முடிவு வரை
தொடர்வேன் ஒரு காவல்காரனாய்
கோபம் வேண்டாம் சிகப்பு அழகியே

Friday, September 10, 2010

காதல் மொழி

காதல் மொழி
கண்ணில் தொடங்கி
இதயத்தை அடைந்து
இதழில் இணைந்து
மனதில் நின்ற பந்தம்

Thursday, September 9, 2010

கணபதி சரணம் அனுதினம் வரனும்

கணபதி சரணம் அனுதினம் வரனும்
உந்தன் வரவு எங்களுக்கு புதிய உறவு

யானை முகத்தவனே என்குட்டி மன்னனே
விநாயக பெருமானே என் வணக்கம் அய்யா உனக்கும்

உன் தும்பிக்கையில் ஊற்றுகிறேன் வெள்ளை பாலை
வாரும் அய்யா வாரும் அய்யா வந்தனம் சொல்ல

நீ வருவாய் என்ற நம்பிக்கையில் தந்தனம் சொல்ல
மனமயக்கும் சந்தனமிட்டு சிகப்பு குங்குமமிட்டு

மங்கள தீபமிட்டு வாசனை ஊதுபத்தி பொருத்தி
உன்னை மணமிக்க என் வீட்டுக்கு அழைக்கிறேன் அய்யா

உன் தொந்தி நிறையவதற்காக முந்திக்கொண்டு
செய்து வைத்தேன் பல வித பலகாரங்களை

கொலு கொலு கொலுகட்டையும் வல வல வாழைபழமும்
தித்திக்கும் கொய்யவும் சிகப்பு ஆப்பிலும் கார சுண்டலும்

பர பர பொறியும் பொட்டுகடலையும் பால் பாயசமும்
மொரு மொரு வடையும் படைத்தேன் உனக்கு

வாசலிலே மாவிலை தோரனமிட்டேன் அய்யா
நீ வரவேண்டும் அய்யா வரம் தர வேண்டும் அய்யா

உங்களுக்காக பார்த்து பார்த்து பக்குவமாய் செய்தேன்
உமக்காக படையல் செய்தேன் குவியலாய்

மனம் கோணாமல் ரசித்து ருசித்து மனமார வரம் அருளும் அய்யா
எந்தன் விநாயக பெருமானே சித்தி விநாயகனே போற்றி போற்றி

பச்சோந்தியும் புத்தி கெட்ட மனிதனும்

பச்சோந்தி நிறம் மாறும் அது இருக்கும் இடத்திற்கு ஏற்ப
புத்தி கெட்ட சில மனிதன் மனம் மாறுவான் பணத்திற்கு ஏற்ப

பயத்தில் நிறம் மாறும் அமைப்பு அதற்க்கு
பேராசையில் மனம் மாறும் அமைப்பு அவனுக்கு

தன்னை பாதுகாக்க இறைவன் கொடுத்த வரம் அதற்கு
தன்னை சீரழிக்க அவன் வாங்கி கொண்ட சாபம் அவனுக்கு

வாரும் சீப்பும் -வாரும் மனிதனும்

வாரும் சீப்பு கூந்தலுக்கு நன்மை பயக்கும்
வாரும் மனிதன் நமக்கு தீமை பயப்பான்

வாரும் சீப்பால் கூந்தல் சீராகும்
வாரும் மனிதனால் வாழ்கை தடம் புரளும்

அழகை கூட்ட சீப்பு வாரும்
வாழ்க்கை சீரழிக்க மனிதன் வாருவான்

Tuesday, September 7, 2010

ஒரு அவியல் கூட்டு தேங்காய் எண்ணெய் மணத்தில்

தல தல பூசணியும், வல வல வாழைக்காயும்
தோல் ஒரித்த பட்டர் பீன்சும் பச்சை பீன்சும்

சொர சொர சேனை கிழங்கும் நெரு நெரு காரட்டும்
இன்னும் பல வித காய் கூட்டணியில் நடக்கும்

ஒரு அவியல் தேரோட்டம் தேங்காய் எண்ணெய் மணத்தில்
செய்முறையுடன் விளக்கியுள்ளேன் செய்வதும் எளிது தான் புரிந்தால்

பற்பல காய்கறிகள் எடுத்து அதை லாவகமாய் நறுக்கி
தண்ணீரில் கழுவி அதில் கழிவுகளை ஒதுக்கி

குக்கர் எடுத்து தண்ணீரை தேவையான அளவு ஊற்றி
கழுவிய காய்கறிகளையும் சிறிதளவு உப்பும் சேர்த்து

சிறுது நேரம் வேக விட்டு சில பல விசில் விட்டு
அடுப்பை அனைத்து வேக வாய்த்த தண்ணீரை வடிகட்டி

தேங்காய் சீரகம் பச்சை மிளகாய் அரைத்து வைத்து
ஒரு பெரிய கிண்ணத்தில் கட்டி புளித்த தயிர் எடுத்து

அரைத்த கலவை அதில் சேர்த்து வெந்த காய்கறிகளையும் கூடு
அனைத்தையும் நன்கு கலக்கி ஒரு பெரிய பாத்திரத்தில் ஊற்றி

தேங்காய் எண்ணெய் சிறிது ஊற்றி கருவப்பிலை கில்லி போட்டு
சிறிது நேரம் கொதிக்க விட்டு பார்த்தால் மணமணக்கும் அவியல் ரெடி

பரிமாற வேண்டியது தான் பாக்கி இதுக்கு எப்போதும் ஏகப்பட்ட கிராக்கி

சட சட மழையே குளு குளு மழையே

சட சட மழையே குளு குளு மழையே
பட பட வேகமாய் சுட சுட வந்தாய்
தட தட ஓட்டம் அங்கங்கு ஒதுங்குது கூட்டம்
என் கால்கள் மட்டும் தனியாய் உன்னை தேடும் நாட்டம்
சிடு சிடுவெனவே உந்தன் சத்தம் மண்ணை தொடும் பொழுது
விண்ணில் இருந்து விழுகுது உந்தன் விழுது
மண்ணில் வந்து தந்தாய் அழகிய அமுது
மழையில் நாணி சில நொடி நானும்
எனை மறந்து துள்ளி துள்ளி குதிக்க
சிறு பிள்ளையை போல மாறி போனேன்
சிறு சிறு சொட்டு என் மேல் பட்டு
பரவசம் அடைந்தேன் எனையும் மறந்தேன்
மழையில் அருவியாய் குளித்தேன்
அதனால் இன்புற்று களித்தேன்
என்னை பார்த்து பலரும் இன்று
மழையில் நனைய ஆசை கொண்டு
சடு குடு போட்டு முண்டி கொண்டு
மழையில் ஆட அழகாய் ஓட
நான் மழையை நாட வெகுண்டு ஓட
கொண்டாட்டம் முடிந்தது ஒரு மணி நேரத்திலே
மழையோ நின்றது திண்டாட்டமாய் தான்
மழையும் பஞ்சத்தில் அடிபட தஞ்சமாய்
மறைந்தது குளத்திலும் குட்டையிலும்
கடலிலும் அருவியுளும் அடுத்த படையலுக்கு

Monday, September 6, 2010

ருசி இல்லாத உணவுக்கு சமம் ஆகும்

அலை இல்லாத கடலும்
பிரச்சனை இல்லாத வாழ்க்கையும்
ஸ்வரம் இல்லாத இசையும்
ருசி இல்லாத உணவுக்கு சமம் ஆகும்

வாழ்க்கை ஒரு விளையாட்டு

வாழ்க்கை ஒரு விளையாட்டு
அதில் உன் ஆர்வத்தையும் கூட்டு

ஒளியாதே உன் ஆட்டத்தில்
தோல்வி கண்டாலும் துவலாதே

மீண்டும் அடுத்த ஆட்டத்தில்
ஒரு கை பார்த்து விடு

விட்டு விட்டு வரும்
வெற்றியும் தோல்வியும்

இது தான் விளையாட்டின் ரகசியம்
புரிந்து தெளிந்து கொண்டால்

நீ என்றும் வெற்றி கனிக்கு சொந்தக்காரி
உண்மையை புரிந்தால் நன்கு தெரிந்தால்

பகை இல்லா விளையாட்டு
நல்ல நட்பை கொடுக்கும்

பொறாமை மனம் படைத்த
விளையாட்டு வெறுமையை தரும்

வாழ்க்கை விளையாட்டை ரசித்தும்
ருசித்தும் விளையாடினால்
சுவாரஸ்யம் தொடரும் என்றேன்றும்

Sunday, September 5, 2010

என் அருகில் நீ வந்த கனம்

என் அருகில் நீ வந்த கனம்
எனக்குள் ஒரு வித கணம்

இதயத்தின் ஓட்டம் வேகமெடுக்க
எனக்கு சடசடனு படபடக்க

வெக்கத்தில் என் கன்னம் சிவக்க
நாணத்தில் என் கால்கள் கோலமிட

நீ வந்து சொல்லிய காதல் தருணம்
மறக்க முடியாத வரம் தான் அது

நீயே அழகின் தேவதை -உனக்கும் பூவுக்கும் உள்ள ஒற்றுமை

உனக்கும் பூவுக்கும் உள்ள ஒற்றுமை
அது மணம் கமல மலர்கிறது உனக்காக

நீயோ உன் எழில்மிகு புன்னகையால்
மலர்கிறாய் என்றும் எனக்காக

என் இனிய நாளை தினமும் மணம் கமல
பூ மலர்வது உனக்காக நீ மலர்வது எனக்காக

பூவின் தேனும் உந்தன் இதழின் பேச்சும்
என்றுமே தித்திக்கும் அமிழ்தாய்

பூவின் மென்மையும் உந்தன் பெண்மையும்
அழகின் ஸ்பரிசம் தூய நேசம்

பூவின் தோழி நீயா இல்லை உந்தன் தோழி பூவா
பூவின் அசைவும் உந்தன் கூந்தல் அசைவும்
உலகை ஒரு நிமிடம் நிறுத்தும் ஆயுதம்

பூவின் இதழும் உந்தன் அழகில் கமழும்
இன்பமும் என்றும் அழியாத சொத்து

இது இறைவன் செய்த அழகிய வித்து
என்றுமே ஆழ்கடலில் கிடைக்கும் முத்து
பொக்கிஷமான முத்து என் பேரழகியே

பூவே அழகாகும் உன் கை பட்டு
இல்லையேல் அதன் அழகும்
தோற்று போகும் வையகத்தில்
நீயே அழகின் தேவதை
நட்பு தாஸ் கலாய்க்கும் பாஸ்(Boss)
நீங்க சொல்றது எல்லாம் மாஸ்(Mass)
அதனால் நீங்க எப்பயுமே பரிட்சையில் பாஸ்(Pass)

கவியில் சக்ரவர்த்தி நிஜத்தில்
மணமணக்கும் எழில்மிகு ஊதுபத்தி
கவிதையில் மணம் கமழும் யுக்தி

தமிழில் நீங்கள் கொண்ட பக்தி
சந்தங்களில் தொடர்ந்து துரத்தி
படைக்கும் கவி பாடும் சக்தி
உங்களுக்கு உண்டு வெங்கடாசலம்

உங்களின் கலாய்கலாம் வாங்க
மிக மிக சோறு தான் போங்க
அதில் நீங்க அழகாய் கூவிதாங்க
கலாய்கிறீங்க ஷோக்கா தாங்க

ஷோக்கு சுந்தரி பல்பு வாங்க
வந்தவேரே எவ்வளவு கலாய்ச்சாலும் நீங்க
ரொம்ப ரொம்ப நல்லவரு தாங்க
இதே ஊரே கைகொட்டி சொல்லுதுங்க

ஹால் ஆப பேம் முன்னேறி
படி படியாய் ஏறி நீங்க சொன்னது நன்னெறி
நீங்க எலாருக்கும் குளு குளு நன்னாரி
உங்களின் இந்த சேவை
தொடர வாழ்த்துக்கள்

மேலும் தொடரட்டும் இந்த கேக்கு
உங்கள் கலாய்க்கும் போக்கு
அது இங்கு இருக்கும் அனைவருக்கும்
ஒரு நிஜாம் பாக்கு பாக்கு

உங்கள் கவி புலமை
போட்டு நீங்க தாக்கு தாக்கு
உங்களின் கலாய்க்கும் சேவையை

போட்டு தாக்கு தாக்குன்னு
தாக்குங்க எல்லாருக்கும் நல்ல
நண்பனாய் கூட்டுங்க சந்தோஷத்தை

வேணி என்ற கண்மணி

வேணி என்ற கண்மணி
என் மனதில் நின்ற பொன்மணி
கவியில் தேர்ந்த பெண்மணி

விண்ணிலே அழகு முழுமதி
மண்ணிலே என்றும் வெண்மதி
கவி சொல்லும் அழகிய திருமதி

கண் அழகியே கவி அழகியே
தங்கசொல் புவி அழகியே

அந்தாதியின் அந்தமே அதியே
சோலை அமைத்து இந்த
சுட்டி அணில் போலே
பல பூங்குயில்களும்
மயில்களும் வரவு தர
பூத்த வைர மலரே
சித்தமும் தமிழ் சந்தமாய்
நித்தமும் தமிழ் அடுக்காய்
பல வகையான படைப்பும்
தந்தாய் இன்னிசை தென்றலே

இதம் தரம் காண இசையை
தமிழில் இனபத்தை பொருத்தி
உன்னை அதற்காக வருத்தி
தந்தாய் சிரத்தை எடுத்து
அழகிய தமிழ் பாடல்களும்

உங்கள் எண்ணற்ற படைப்பும்
அதன் அனுபவபூர்வ அமைப்பும்
அளவில்லா பொக்கிஷமாய் வீற்று
விண்ணை தொட்டது சாதனையாய்

உங்களிடம் நான் கண்ட அன்பும்
உங்கள் அற்புத படைப்புகளில்
நான் கொண்ட காதலும்
நம் நங்கூர நட்பின் வளத்தை
உரமேற்றும் ரகசியம் ஆகுமாம்

சொல்ல வார்த்தைகள் இருந்தும்
திணறுகிறேன் சில சமயம்
அழகிய சிந்து பாட
இந்த சந்த நண்டு
விழிபிதுங்கி ஓட வரிகளுக்குள்
ஒரு தேன் தேடும் வண்டாய்

இந்த சுண்டு சுட்டி பொண்ணு
சித்ரா என்ன செய்ய உங்கள் நட்பின்
ஆழத்தையும் நீளத்தையும் விவரிக்க
என்றும் நட்பு தொடர வேண்டுகிறேன்
வரமாய் உங்களிடமும் இறைவனிடமும்

Saturday, September 4, 2010

தாயை போல கருணையும்
தவறுகளை திருத்தும் ஆசானும்
ஞானி ஆக்கும் வழிகாட்டியும்
ஏணியாய் இருந்து என்னை ஏற்றியதும்
அறிவு பசியை ஆற்றியதும்
நல்லது கெட்டது அறியும் அறிவு தந்ததும்
புத்தனின் ஞானமும் சித்தனின் அனுபவமும்
சொல்லி கொடுத்த தெய்வமும்
சிறு சிறு தவறுகளை திருத்தியும்
உலக அறிவையும் உணர்த்தியும்
என்னையும் பலரையும் மேலே உயர்த்தியும்
எங்கள் திறமைகளை புரியவைத்தும்
தோழன் போல தோளில் தட்டிகுடுத்தும்
முன்னேற்ற பாதையில் அழைத்து சென்றும்
பல சேவை செய்த உங்கள் சேவைக்கு
நன்றி சொல்கிறேன் என் பாசமிக்க ஆசிரியரே
உங்கள் ஆசிரியர் பயணம் என்றும்
இனிமையாய் நீண்டு தொடரவும்
நீங்கள் பல்லாண்டுகள் வாழவும்
என் ஆசிரியர் தின வாழ்த்துக்கள் கூறி
கவிதை பூங்கொத்தை சமர்பிக்கிறேன்

Friday, September 3, 2010

ஈ மொய்ப்பது போல பள்ளியில் மொய்க்கும்
மாணவிகள் கூட்டம் ஒரு அழகிய தேரோட்டம்

கடவுள் வாழ்த்து சமயத்தில் மணலில் விளையாட்டு
அடுத்தவர் தலையில் கொம்பு வைக்கும் சேட்டைகளும்

புரிந்தும் புரியாமலும் சொல்லும் காலை வணக்கம்
கூட்டத்துடன் கோவிந்தா போடும் பள்ளி நாட்கள்

சில சமயம் வெறும் வாய் அசைத்து நடிக்கும்
லீலைகளும் உண்டு கடவுள் வாழ்த்து சொல்லும் சமயம்

ஒரு நாள் ஜெப கூட்டத்தில் பள்ளி மாணவிகள் சல சலக்க
தலைமை பேராசிரியர் பள்ளி மாணவிகள் அனைவரயும்
முட்டி கால் போட செய்ய அனைவருக்கும் கொண்டாட்டம்

அன்று காலை பரீட்சை நடக்கவில்லை இந்த காரணத்தினால்
மறுபடியும் ஆர்ப்பாட்ட ஆட்டம் தான் ஜோர் ஆக வந்தது

அண்ணாச்சிமார்கள் ஓசன்னா பாட்டு சொல்லி கொடுப்பார்கள்
ஒன்றும் புரியமால் அனைவரும் கோருசாக கூவ

இல்லை கத்த அன்றைய பொழுது பரீட்சை நடக்காது
ஆசிரியரும் பாடம் நடத்த மாட்டார் என்ற கொண்டாட்டம் தான் அது

இப்படி அனுதினமும் சேட்டைகளும்
லூட்டிகளும் உண்டு கடவுள் வாழ்த்து பாட்டில்

மணி அடிச்சா விடுதலை-இது சாப்பாடு வேளை

மணி அடிச்சா விடுதலை
நெனச்சத சாப்பிடு ஜோரா
இது சாப்பாடு வேளை
அங்கு இங்கும் ஓடி ஆடு
ஒரு மணி நேரம் தான்
திரும்பியும் கூட்டமாய்
உள்ளே அடைந்திடு
பாடம் படிக்க பள்ளி அறையில்
என்று ஆசிரியர் கூவுகிறார் குயிலாய்
ஈ மொய்ப்பது போல பள்ளியில் மொய்க்கும்
மாணவிகள் கூட்டம் ஒரு அழகிய தேரோட்டம்

புரிந்தும் புரியாமலும் சொல்லும் காலை வணக்கம்
கூட்டத்துடன் கோவிந்தா போடும் பள்ளி நாட்கள்

சில சமயம் வெறும் வாய் அசைத்து நடிக்கும்
லீலைகளும் உண்டு கடவுள் வாழ்த்து சொல்லும் சமயம்

ஒரு நாள் ஜெப கூட்டத்தில் பள்ளி மாணவிகள் சல சலக்க
தலைமை பேராசிரியர் பள்ளி மாணவிகள் அனைவரயும்
முட்டி கால் போட செய்ய அனைவருக்கும் கொண்டாட்டம்

அன்று காலை பரீட்சை நடக்கவில்லை இந்த காரணத்தினால்
மறுபடியும் ஆர்ப்பாட்ட ஆட்டம் தான் ஜோர் ஆக வந்தது

அண்ணாச்சிமார்கள் ஓசன்னா பாட்டு சொல்லி கொடுப்பார்கள்
ஒன்றும் புரியமால் அனைவரும் கோருசாக கூவ

இல்லை கத்த அன்றைய பொழுது பரீட்சை நடக்காது
ஆசிரியரும் பாடம் நடத்த மாட்டார் என்ற கொண்டாட்டம் தான் அது

இப்படி அனுதினமும் சேட்டைகளும்
லூட்டிகளும் உண்டு கடவுள் வாழ்த்து பாட்டில்

Thursday, September 2, 2010

வைகை ஒளியே தீபா

வைகையில் பூத்த மலரே
தீப மலரே

நீ தீபம் போன்ற ஒளியாய்
பூத்தது வியப்பு

உன் ஒளி அனைவரின்
நெஞ்சிலும் வெளிச்சமாய்

வைகை ஒளியே தீபா
என்றும் நீ எந்தன்
அனையா தீபமடி நீ

தேவலோக மங்கை தேவப்ரியா குட்டிமா

தேவலோக மங்கை
ஆகாய கங்கை
என் அழகிய தங்கை
பிரியமான தேவா

தெய்விக தேவியா நீ
உன்னை பிரியாத வரம்
எனக்கு மட்டும் வேண்டும்

என் அழகு செல்லமே
தங்க கட்டி வெல்லமே

தேவப்ரியா குட்டிமா
நீயே எந்தன் சுட்டிமா

நரசுஸ் காபி பேஷ் பேஷ் நன்னா இருக்கு





அழகாய் காச்சிய பசும் பாலில்
வைரம் போன்ற சக்கரை சேர்த்து
என் அக்கறை கோர்த்து
கமகமக்கும் காபி தூள் போட்டு
இன்பத்தை கூட்டி
செய்தேன் ஒரு தித்திக்கும் காபி
நரசுஸ் காபி
கொடுத்தேன் பருக என்னவரிடம்

பேஷ் பேஷ் நன்னா இருக்கு
என்று என்னவர் சொல்ல
என் கன்னம் வெக்கத்தில் சிவக்க
அந்த நாள் என்றும் இனிமையாய் பளபளக்க
தினம் தினம் அனுதினமும் நடக்கும் காட்சி
இது என் சந்தோஷத்தின் சாட்சி

Wednesday, September 1, 2010

உன் கன்னத்திலே சிறு மொட்டு

உன் கன்னத்திலே சிறு மொட்டு
மலராதது ஏனோ என் சிட்டு
அந்த பரு பூக்களின் திட்டு
அதையும் ரசிக்கும் -என்
கண்கள் உன் மேல் பட்டு
அதை பார்த்து செல்லமாய்
வெக்கத்தில் என்னை கொட்டு

இந்த கோகுலாஷ்டமியில்


கோகுலத்தின் கண்ணன்

அன்பு மணிவண்ணன்

என் வாசல் தேடி வரும் மன்னன்

உனக்காக வாசலிலே

கோலமிட்ட வண்ணம்

பல வித பலகாரங்கள் பண்ணி

உனது வருகையை எண்ணி

பூத்திருக்கேன் இந்த பெண்மணி

உன் பாத சுவடுகள் இட்டு

நீ வந்தால் நான் தருவேன்

வெண்ணை உருண்டை லட்டு

வாடா என் நீலவண்ண அழகிய கண்ணா

இந்த கோகுலாஷ்டமியில்


உன் குங்கும பொட்டு

வில் ஒத்த புருவத்தின் நடுவே

வட்ட நிலவு சிகப்பு நிலவாய்

நீ இட்ட குங்குமத்தின் அழகு 

என்னை தள்ளாட  செய்கிறது

உன் அழகு குங்கும பொட்டு

உன் அழகிய நாணத்துடன்

உன் 
கோணல் சிரிப்பும்

அந்த 
ஓர பார்வையும்

ஒரு கனம் என்னை புயலில்

தள்ளி  விடுவது போல படபடப்பு

என் இதய துடிப்பில்  ஒரு வித சலனம்

ஒரு ஆழ்ந்த பெருமூச்சுடன் இன்றும்

Tuesday, August 31, 2010

என்ன மென்மை
உந்தன் பெண்மை
தூய வெண்மை
அழகிய மேன்மை
இதுவே உண்மை என்று
என்றைக்கு சொல்வார்
எந்தன் என்னவர்
என் அழகிய கணவர்
அருமையாய் என்னை
என்று புகழ்வார்
என்று துடிக்கும்
மனைவிகள் சங்கம்

நிலவு பாட்டு

வானிலே வெண்ணிலா
தேன் கலந்த மின்னலாய்
பாடுதே தென்றலாய்
ஒரு அழகிய கவிதையை
நிலவு பாட்டாய்

மைதா மிளகு முறுக்கு கவிதை நடையில்

சலிச்சு எடுத்த மைதாவும் !!
வெண்மையான அரிசி மாவும்!!
நெறு நெறு ரவையும் எடுத்து!!
வடை சட்டியில் வதக்கி எடுத்து !!
கார சார மிளகுதூளும் !!
சுறு சுறு சீரகமும் பொடித்து எடுத்து !!
அந்த வறுத்த கலவையில் சேத்து !!
கம கமக்கும் நெய் எடுத்து !!
அனைத்தையும் அழகாய் அழகழகாய் !!
மெல்ல பிசைய உப்பை ருசிக்கு கூட்ட!!
நன்றாய் மசித்து பிசைய !!
வடை சட்டையில் எண்ணெய் ஊற்றி!!
அடுப்பில் நெருப்பு மூட்டி !!
முறுக்கு அச்சில் மாவை உருண்டை போட்டு!!
கொதித்த எண்ணெயில் மாவை புழிய!!
வீடெங்கும் முருக்கின் வாசனை வழிய!!
மொரு மொரு கார சார மைதா முறுக்கு !!
தயார் தான் ஜோரா !!
இதையே தட்டி போட்டால் கிடைப்பது !!
தட்டையாகும் கதை இது !!

நாகேஷ் படம் ரீமேக் சாக்லேட் சாயலில்

நான் நடக்க நடக்க காசு
என் காலடியில் தட்டு பட
எடுத்து போட்டேன்
சட்டை பையில் காசு நிறைந்தது
கடை அருகே சென்றேன்
ஒரு சாக்லேட் வாங்க
தடவினேன் சட்டை பையை
அப்போது தான் புரிந்தது
சட்டை பை ஓட்டை என்று
என்ன கொடுமையோ  கிடைத்த
 ஒரே காசு  தான் சுற்றி சுற்றி
காட்டியது பை நிறையும் விளையாட்டை
(நாகேஷ் படம் ரீமேக் சாக்லேட் சாயலில்)

Sunday, August 29, 2010

எனக்கா பைத்தியம் போடா புத்தி கெட்ட மனிதா

(ஒரு மனிதன் இன்னொரு மனிதனை(பைத்தியம்) என்று அவமதிக்கிறான் ஏன் என்றால் அவன் ஒரு பைத்தியம் என்று மிர்றவர்  சொன்னது உண்டு அதனால் காய படுத்தி பார்கிறான் .ஆனால் உண்மையில் தலை குனிந்தது  பைத்தியம் அல்ல அவனை காயபடுத்திய மனிதன்தான் )

எனக்கா பைத்தியம் போடா புத்தி கெட்ட மனிதா

இந்த உலகத்தில் உலவுது பணப் பைத்தியம்   
சொத்து பைத்தியம் 

சோறு கண்ட இடமே சொர்க்கம் என்று
 நீ உழைக்காமல் இருந்தால் சோம்பேறி பைத்தியம் 

பெண் மேல் ஆணும் ஆண் மேல் பெண்ணும்
கொள்ளும் காதல் பைத்தியம்

பெண் மேல் ஆணும் ஆண் மேல் பெண்ணும்
கொடூர வெறி மனம் படைத்த காம பைத்தியம் 

அடுத்தவர் மனதை தேள் போல்
 கொட்டும்  கோப பைத்தியம் 

அடுத்தவர்களின் நம்பிக்கையை ஏமாற்றி
அதில் குளிர் காயும் நீயே ஒரு  பைத்தியம்  

எதிர்பார்ப்பு வளர்த்தால் நீயும் ஒரு  பைத்தியம்

ஏமாந்துபோய் தலையில் துண்டை போட்டு
கொண்டால் நீயும் பைத்தியம்

சூது, குதிரை  பந்தயத்துக்கு அடிமையாகும்
கோழை பைத்தியம்

பணக்காரன் ஆக வேண்டும் என்று எண்ணி
இருப்பதை கோட்டை விடும் நீயும்  பைத்தியம்

புகை பழக்கம் குடி பழக்கத்துக்கு அடிமை ஆகும்
நீ ஒரு கேவல புத்தி படைத்த பைத்தியம்

அனைவரயும் தப்பான பார்வை பார்க்கும்
அசிங்கமான மனித பைத்தியம்

எந்தவொரு விஷயத்துக்கு
அடிமை ஆகும் நீயும் பைத்தியம்

அதற்க்கு செய் நீ முதலில் ஒரு வைத்தியம்
நீ தெளிந்தால் என்னை சொல் பைத்தியம் என்று

இதுவும் நடக்காத சிரிப்பு கூத்து தான்
யாருக்கு பைத்தியமோ எனக்கு வியப்பு தான்
என்ன வைத்தியமோ அதும் ஒரு வித தவிப்பு தான்

Thursday, August 26, 2010

எனக்கு உன்னை காணும் கனவு

சந்தன காற்று
மிக மிக  இதமாய் வீச

என்  மனது என்னை
 மறந்து  அழகாய் பேச

உன் தங்க விழிகள்
என் கண்களை கூச

என்ன ஒளியோ அது
என்று அறிய எனக்கு ஆச

சீக்கிரம் எழுந்திரி என்று
என் அம்மா என்னை ஏச

புரிந்தது எனக்கு உன்னை
காணும் கனவு பூச

கவிதை மாளிகை

சின்ன சின்ன கவிதை
செங்கலேடுத்து   

அதை அழகஅழகாய் 
அடுக்கிவைத்து

அதில் கற்பனை சிமெண்டை
பூசியடித்து  

அடுக்கு அடுக்காய்
அற்புதமாய் கட்டினேன்

நான் ஒரு அழகிய
கவிதை மாளிகையை

Wednesday, August 25, 2010

காதல் ஊற்று

காதல் ஊற்று
அழகிய குளிர் காற்று
இருமனம் சலசலப்பு ஏற்று
சறுக்கல் இல்லாமல் கற்று

நடக்குது அன்பு பாகு
சொல்லும் தேன்பாகு
காதல் பரிமாண பாகு
ருசியாக நாக்கில் இருவர்க்கு

பல பின்னலிட்டேன் வலையில்

பல பின்னலிட்டேன் வலையில்
உப்பு காற்று வீசும் தரனும்
மீனவன் மனதில் ஒரு சலனம்
சிறு படகில் ஏறிய தருணம்

வலை தந்தாள் மீனவன் துணைவி
புன்னகையுடன் வழி அனுப்பினால் வினவி
மீனவன் பயணபட்டான் படகை தழுவி
மீன்கள் துள்ளி ஓடி கொண்டு இருந்தது நழுவி
வலையில் இருந்து குதித்து

கடல் நீரில் அவன் படுகு சவாரி தொடர
கிடைத்தது ஒரு பெரிய மீனின் தஞ்சம்
அந்த அழகிய வலையில் மஞ்சம்
அவன் வலையோ மீனுக்கு வஞ்சம்
கிடைத்த மீனோ மிகவும் கொஞ்சம்
ஆனால் பெரியமீன் என்பதால் அதுவே மிஞ்சும்

சந்தோஷத்தில் அவன் மகிழ்ந்தான்
கரைக்கும் ஆனந்த மிகுதியில் திரும்பினான்
உவகையில்  துணைவியை தேடினான்
அங்கும் இங்குமாய் ஓடினான்
தன் இன்பத்தை சொல்ல நாடினான்

கண்ணில் பட்டாள் துணைவி அழகாய்
பெரிய மீன்களை காட்டினான் வேகமாய்
மகிழ்ச்சி கடலில் திளைத்தாள் அவள் நிலவாய் 
ஆனந்தமாய் சென்றது அன்றைய நாள் இனிமையாய்
 
 

எனக்கா பைத்தியம் போடா புத்தி கெட்ட மனிதா

எனக்கா பைத்தியம் போடா புத்தி கெட்ட மனிதா

இந்த உலகத்தில் உலவுது பணப் பைத்தியம்   
சொத்து பைத்தியம் 

சோறு கண்ட இடமே சொர்க்கம் என்று
 நீ உழைக்காமல் இருந்தால் சோம்பேறி பைத்தியம் 

பெண் மேல் ஆணும் ஆண் மேல் பெண்ணும்
கொள்ளும் காதல் பைத்தியம்

பெண் மேல் ஆணும் ஆண் மேல் பெண்ணும்
கொடூர வெறி மனம் படைத்த காம பைத்தியம் 

அடுத்தவர் மனதை தேள் போல்
 கொட்டும்  கோப பைத்தியம் 

அடுத்தவர்களின் நம்பிக்கையை ஏமாற்றி
அதில் குளிர் காயும் நீயே ஒரு  பைத்தியம்  

எதிர்பார்ப்பு வளர்த்தால் நீயும் ஒரு  பைத்தியம்

ஏமாந்துபோய் தலையில் துண்டை போட்டு
கொண்டால் நீயும் பைத்தியம்

சூது, குதிரை  பந்தயத்துக்கு அடிமையாகும்
கோழை பைத்தியம்

பணக்காரன் ஆக வேண்டும் என்று எண்ணி
இருப்பதை கோட்டை விடும் நீயும்  பைத்தியம்

புகை பழக்கம் குடி பழக்கத்துக்கு அடிமை ஆகும்
நீ ஒரு கேவல புத்தி படைத்த பைத்தியம்

அனைவரயும் தப்பான பார்வை பார்க்கும்
அசிங்கமான மனித பைத்தியம்

எந்தவொரு விஷயத்துக்கு
அடிமை ஆகும் நீயும் பைத்தியம்

அதற்க்கு செய் நீ முதலில் ஒரு பைத்தியம்
நீ தெளிந்தால் என்னை சொல் பைத்தியம் என்று

இதுவும் நடக்காத சிரிப்பு கூத்து தான்
யாருக்கு பைத்தியமோ எனக்கு வியப்பு தான்
Protected by Copyscape Online Plagiarism Checker